இன்றைய கூகுள் தேடலில் 'ஐபோன் 15' தான் டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 15 மணிநேரத்தில் 2,00,000 தேடல்கள் மற்றும் தேடல் அளவு 100% அதிகரிப்புடன் அதிரடியான உயர்வை கண்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: iPhone 15 among top Google search trends after iPhone 16 launch
இதற்கு காரணம் நேற்று முன்தினம் திங்கள்கிழமை ஐபோன் 16 சீரிஸ் வெளியிடப்பட்டதே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் ஐபோன் 15 தொடர்பாக பலரும் கூகுளில் தேடி வருகிறார்கள் என்றும், இதுவே அதன் சமீபத்திய தேடல்களின் எழுச்சிக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல ஐபோன் பயனர்கள் அம்சங்களை ஒப்பிடவும், விலைகளைச் சரிபார்க்கவும், புதிய ஐபோன் 16 சீரிஸ் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும் கூகுளுக்கு திரும்பியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிளின் குபெர்டினோ தலைமையகத்தில் நடைபெற்ற 'இட்ஸ் க்ளோடைம்' (It's Glowtime) நிகழ்வில், தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அதன் சமீபத்திய ஐபோன் 16 சீரிஸை அறிமுகப்படுத்தியது. அதன் உற்பத்தி ஏ.ஐ தொழில்நுட்பமான ஆப்பிள் இன்டலிஜன்ஸ்-இன் ஒருங்கிணைப்பை மற்ற அதன் போட்டியாளர்களை விட முன்னிலைப்படுத்துகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸில் உள்ள தொழில்நுட்ப எழுத்தாளர்களின் கூற்றுப்படி, ஆப்பிள் அதன் ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்களுக்கான அப்டேட்களையும், அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய மென்பொருள் அம்சங்களுடன், குறிப்பாக செவித்திறன் குறைபாடுள்ள பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்டதாக அறிவித்துள்ளது.
ஐபோன் 16 சீரிஸில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் ஆப்பிள் இன்டலிஜன்ஸ்-க்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவைக் கொண்டிருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“