நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா மும்பை இந்தியன்ஸ் பற்றி பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று புனேவில் நடைப்பெற்ற ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி மற்றும் சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இதில், பஞ்சாப் அணி சென்னை அணியுடன் தோல்வி கண்டு பிளே ஆப் சுற்றிற்கு செல்லும் தகுதியை இழந்தது.
இந்த போட்டியை நேரில் காண பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பீர்த்தி ஜிந்தா மைதானத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது தனது அணி தோல்வியை தழுவினாலும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் போனதுதான் தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்று அவர் கூறியவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு போட்டியில் ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்லமுடியாமல் தொடரில் இருந்து வெளியேறிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் நடப்பு சாம்பியன் மும்பை அணி தோற்ற ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறிது.
இந்நிலையில், பீர்த்தில் ஜிந்தா தனது அணி தோல்வியுற்றது தரும் வருத்தத்தைக் காட்டிலும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் போனதுதான் மகிழ்ச்சி அளிப்பதாக சிரித்துக் கொண்டே கூறுவது வீடியோவாக வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் பீர்த்தி ஜிந்தா பேசி இருப்பது, “ நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை. உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ஆங்கிலத்தில் கூறிக் கொண்டே ஐஃபையும் செய்கிறார்.. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
,
பீர்த்தி ஜிந்தாவின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர் பீர்த்தி ஜிந்தாவை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.