வைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”

சிலர் இன்ஸ்டாகிராமில் புதிய சேலன்ச் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்

சிலர் இன்ஸ்டாகிராமில் புதிய சேலன்ச் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”

ஐபிஎல் 2018  போட்டியில் பிஸியாக  இருக்கும் வீரர்கள் சைடு கேப்பில் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஒரு புது புரட்சியையே செய்து வருகிறார்கள்.

Advertisment

ஒட்டு மொத்த இந்தியாவிலும் தற்போதையை ஹாட்  டாப்பிக்  ஐபிஎல் தான். வருடந்தோறும் நடக்கும் இந்த ஐபிஎல்  இந்த வருஷம் மட்டும்  கொஞ்சம் ஓவரா மாஸ் காட்டுதோனு எல்லாருக்கும் ஒரு ஃபீல். அதுக்கு என்ன காரண்ம் வேணா  சொல்லலாம்.

2 வருட தடைக்கு பின்பு  களத்தில் இறங்கி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், அல்லது புதிய அணி மாறி இருக்கும் வீரர்கள்,  காவிரி விவகாரத்திற்காக ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்னு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு. இந்நிலையில், தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் ஹர்பஜன் சிங்  தமிழிலியே ட்வீட் போட்டு ட்விட்டரில் புரட்சி செய்து வருகிறார்.

அவரின் கவனம் தமிழ் மீது செல்ல,  மற்ற அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் புதிய சேலன்ச் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். #BreakTheBeard challenge என்று இதற்கு பெயரும் சூட்டியுள்ளனர். இதன்படி தாடியுடன் சுற்றிக் கொண்டிருக்கும் வீரர்கள் கிளீன் சேவ் செய்து புதிய கேட்டப்பில்  தோன்ற வேண்டும்.

Advertisment
Advertisements

அதை அவர்கள் ஒரே வீடியோவில் முன் , பின்  என்று வேறு வேறு கெட்டப்பில் தோன்றி ரசிகர்களை வியக்க வைத்துள்ளனர்.  இந்த வீடியோக்கள் அந்தந்த வீரர்க்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது.

,

https://www.instagram.com/p/BhcBYallyKO/?utm_source=ig_embed

,

,

வீரர்கள் பதிவிட்டுள்ள இந்த வீடியோக்களை லட்சத்திற்கும் மேற்பட்ட  ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  போன வருடம் ஐபிஎல்லின் போதும் இதே மாதிரி ஒரு சேலன்ச்  சமூகவலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

Shikhar Dhawan Ravindra Jadeja Ipl 2018 Hardik Pandya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: