IPL cricket memes: ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26ம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நடப்பு தொடர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றை எட்ட குறைந்தது 8 வெற்றிகள் தேவைப்படும்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே ஐபிஎல் போட்டிகள் தொடர்பான சுவையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இவை இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வரும் ‘ஐபிஎல்’ மீம்ஸ் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் மீம்ஸ்:
ஐ.பி.எல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சீசனில் 8 தோல்விக்கு பின் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் வெற்றியை ருசித்துள்ளது. மீதமுள்ள ஆட்டங்களில் அந்த அணி வெற்றி பெற்றாலும் பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டது. இதேபோல் தொடர் தோல்விகளால் துவண்ட 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வெற்றி, 6 தோல்வியுடன் 9வது இடத்தில் உள்ளது.
இதற்கிடையில், சென்னை அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஜடேஜா தனது பதவியை முன்னாள் கேப்டன் தோனியிடம் ஒப்படைத்தார். நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியை வழிநடத்திய அவர் அணி வெற்றி பெற உதவினார்.









ரம்ஜான் மீம்ஸ்:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரியாணி குறித்த மீம்ஸ்கள் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“