New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/13/GNV64xmxMfydtK2LKebW.jpg)
மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்து 10-வது இடத்தில் உள்ளது. எப்போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி 2 (அ) 3 இடங்களில் இடம்பெறும். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ரசிகர்கள் அந்த அணியை கிண்டல் செய்து வருவார்கள்.
ஆனால் இம்முறை நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் ஆடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பார்த்து "ஒரு ஸ்டேஜ்க்கு மேல கடைசி இடத்தில் இருப்பதற்கு கூச்சப்படனும்டா" என 7ஜி ரெயின்போ காலனியில் ஹீரோவின் தந்தை திட்டும் காட்சியை வைத்து மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.
ஐ.பி.எல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மாற்றி, மாற்றி கோப்பைகளை வென்று வந்தன. அந்த 2 அணிகள் மட்டுமே மொத்தமாக 10 ஐ.பி.எல். கோப்பைகளை வென்று இருக்கின்றன. ஆனால், இந்த முறை அந்த 2 அணிகளும் புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருப்பதால் மற்ற அணிகள் அதை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக ஒரு மீம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒருவர் "ரொம்ப நாள் ஆசை மேடம்" என்று சொல்வதாக மீம்ஸ் இடம் பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வரிசையாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்தது. நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று மீண்டும் வந்து இருக்கிறது. ஆனால் இன்னும் அந்த அணி அதிக வெற்றிகளை பெற்றால் மட்டுமே புள்ளிப் பட்டியலில் வேகமாக முன்னேற முடியும். இந்நிலையில் அந்த அணி அடுத்தடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகளில் விளையாட உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் தற்போது மோசமாக விளையாடி வரும் நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அந்த 2 போட்டிகளுக்காக ஆவலோடு காத்திருப்பதாகவும் ஒரு மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். ஸ்பைடர் மேன் பட வில்லன் ஸ்பைடர் மேனை பார்த்து "ஹலோ பீட்டர்" என்று ஆவலோடு சொல்வது போல மீம் வெளியிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.