New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/07/otZIuh7L0G6dHd6tdhjM.jpg)
2025 ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து, ரசிகர்கள் அதை மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். இந்தப் போட்டியில் தோனி வெற்றிக்காக ஆடாமல் நிதானமாக ஆடியது விமர்சனத்தை சந்தித்து உள்ளது. மேலும், சி.எஸ்.கே அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது என்று கேலி செய்து மீம்ஸ்களை தெறிவிட்டு வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. முதலில் இறங்கிய டெல்லி அணி 183/6 (20) ரன்கள் எடுத்தது. கே.எல் ராகுல் 77 ரன்கள் எடுத்து அசால்ட்டாக சிஎஸ்கே அணிக்கு பிரஷர் போட்டார். அவரை அடுத்து இறங்கிய சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் சீட்டு கட்டு போல சரிந்தது. விஜய் சங்கர் மட்டும் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய தோனி 26 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்கள் கூட எடுக்காத நிலையில் சிஎஸ்கே அணி மோசமாக படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 4 போட்டிகளில் முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் வரிசையாக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளது.
அயன் படத்தில் சூர்யாவிடம் பிரபு பேசும் ஒரு காட்சியை வைத்து, சி.எஸ்.கே. அணி குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். "என்னடா 2 மேட்ச் சாமிக்கு 3 மேட்ச் சாமிக்கு விட்டோம்-னு சொல்லிகிட்டு, இந்த சீசனையே சாமிக்கு விட்டோம்-னு ஒரே போடா போடுங்கடா" என்று பதிவிட்டு கலாய்த்துள்ளார்.
சி.எஸ்.கே அணி சேஸிங் செய்தபோது தோல்வி கிட்டத்தட்ட உறுதியானதற்கு பிறகே விஜய் சங்கரும், தோனியும் சிக்ஸர்களை அடித்தனர். அதை வைத்து "லப்பர் பந்து" படத்தில் வரும் காட்சியை சுட்டிக்காட்டி, "என் மாப்பிள்ளை மேட்ச் தோற்கிறோம்னு தெரிஞ்ச அப்புறம்தான் சிக்ஸ் அடிப்பான்" என்று கிண்டல் செய்துள்ளனர்.
சி.எஸ்.கே. அணியின் தோல்வியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களையும் கேலி செய்யும் விதமாக ஒரு மீம் போடப்பட்டுள்ளது. அதில் "நாங்கள் 3 மேட்ச் போராடி தானே தோற்றோம், உன்ன மாதிரி ஒரு கப்பு கூட ஜெயிக்க வக்கில்லாமயா தோற்றோம்" என வடிவேலுவை வைத்து கேலி செய்வது போல ஒரு மீம் உள்ளது.
தோனியிடம் உண்மையான சி.எஸ்.கே ரசிகர்கள், "அண்ணே எப்படிண்ணே இந்த மொக்கை டீமை வச்சுக்கிட்டு 5 கப் ஜெயிச்சீங்க?" என்று கேட்பது போல ஒரு மீம் வெளியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.