New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/04/QXNmvsjiIdtXwAHDC3Lz.jpg)
'நம்ம ஜெயிச்சுட்டோம் மாறா'.. ஆர்.சி.பி.யன்ஸ் அலப்பறை; பழச தோண்டி சி.எஸ்.கே. ரசிகர்கள் பதிலடி - வைரல் மீம்ஸ்!
வெற்றி கொண்டாத்தில் இருக்கும் ஆர்.சி.பி. ரசிகர்கள், நம்ம ஜெயிச்சுட்டோம் மாறா என்று முழங்கி வருகின்றனர். சி.எஸ்.கே., மும்பை அணி ரசிகர்களையும் வம்புக்கு இழுக்கின்றனர். ஐ.பி.எல்.லில் பண்ண பழைய சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்தி சி.எஸ்.கே. ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
'நம்ம ஜெயிச்சுட்டோம் மாறா'.. ஆர்.சி.பி.யன்ஸ் அலப்பறை; பழச தோண்டி சி.எஸ்.கே. ரசிகர்கள் பதிலடி - வைரல் மீம்ஸ்!
அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.18 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றுள்ளதால், ஆர்.சி.பியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
ஐ.பி.எல். தொடங்கியது முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி ஆட்டத்தின் இறுதி ஓவரை ஹேசில்வுட் வீசியபோது ஆர்.சி.பி. வெற்றி பெறுவது உறுதியானதும் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tears. Roars. Jubilation 🥹
— IndianPremierLeague (@IPL) June 3, 2025
The emotions of #RCB were raw, real, and 1⃣8⃣ years in the making ❤️#TATAIPL | #RCBvPBKS | #Final | #TheLastMile | @RCBTweets pic.twitter.com/fXVTbfCZFp
இனிமேல் இங்க நாங்கதான் IPL யை ஆளும் பரம்பரை ❤️🔥 pic.twitter.com/9U6MKwPzxb
— ராஸ்கல் (@Rascal1_) June 4, 2025
”எங்களிடம் வராதீர்கள் தோழர்களே” என்று ஆர்.சி.பி.யை பார்த்து 5 முறை ஐ.பி.எல். கப் அடிச்ச சி.எஸ்.கே. அணி கூறுவதுபோல மிரட்டல் மீம்ஸ் வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது
எங்களிடம் வராதீர்கள் தோழர்களே https://t.co/KqDNoQLSS2 pic.twitter.com/re8MquHbYY
— Raagh-ol (@Cringecat__) June 4, 2025
மாரி படத்தில் நடிகர் தனுஷ், புறா ரேஸ் பறக்கவிடுவது தொடர்பாக மைம் கோபியிடம் விட்டுக்கொடுப்பார். அதனை, சி.எஸ்.கே அணி ஆர்.சி.பி. அணிக்கு விட்டு கொடுப்பது போல சி.எஸ்.கே. ரசிகர்கள் வீடியோ மீம் போட்டுள்ளனர்.
MAARI-oda records ennanu theriyama sound vitutu irukkanunga! 😏🔥 pic.twitter.com/B1pesCifiQ
— Simply South (@SimplySouthApp) June 4, 2025
ஐ.பி.எல். போட்டிகள் முடிஞ்சிருச்சு, இனி வாழ்க்கையை பார்க்க போலாம் என்று நினைக்கும்போது, என்ன அவசரம்? என்று வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கமல் கேட்பதுபோல், நம் மைண்ட் நம்மிடம் WTC பைனல்ஸ் வர போது, இந்தியா VS இங்கிலாந்து போட்டிகள் நடக்கபோது, தக் லைஃப் வரப் போகுது, ஆக்ஸ்ட்-ல தமிழ் சினிமாவின் முதல் ரூ.1,000 கோடி படமான கூலி வரப்போகுது என்று சொல்வதுபோல் மீம் பகிரப்பட்டுள்ளது.
IPL mudinchu, poi life ah papom.
— sk. (@edda_mone) June 3, 2025
: ena avasaram?
WTC finals vara podhe, india vs Eng series nadaka podhu, Thug Life varudhe, Aug la Kollywood oda first 1000 cr Coolie release aaga podhe. pic.twitter.com/N0B9srFzkc
வேலாயுதம் படத்தில் திருடனாக வரும் சந்தானம், பல போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக கூரையை பிரித்து பணத்தை திருடுவிடுவார். அதேபோல், 18 வருடத்திற்குப் பிறகு ஆர்.சி.பி. அணி கஷ்டப்பட்டு கப் ஜெயிச்சதற்கு இதனை ஒப்பிட்டு மீம் போட்டுள்ளனர்.
Oru vazhiyaa panatha eduthuttan da! 😂
— Simply South (@SimplySouthApp) June 4, 2025
Watch Santhanam as Speed in #Velayudham, now streaming on Simply South worldwide, excluding India. pic.twitter.com/BYIS1kwSLi
மேலும் பல பதிலடி மீம்ஸ்களை ஆர்.சி.பி. ரசிகர்கள் இணையதளத்தில் பகிரவிட்டு கெத்து காட்டி வருகின்றனர். ஐ.பி.எல்.லில் ஒரு கப் அடிச்சதுக்கே இவ்வளவா அலப்பறையா? என சி.எஸ்.கே., மும்பை, குஜராத் அணி ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
மீம்ஸ் தொகுப்பு: அருண் தமிழ்ராஜ், மதுரை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.