scorecardresearch

‘கெஸ்ட் ரோலுக்கு கோடி கோடியா சம்பளம் வாங்குறாங்க’: ரோகித் சர்மா வைரல் ஐ.பி.எல் மீம்ஸ்

கோலி & ரோஹித் இவங்க மட்டும்தான் கிரௌண்டுக்குள்ள வர கொஞ்ச நேர கெஸ்ட் ரோலுக்கு கோடி கோடியா சம்பளம் வாங்குறாங்க.. என்று நெட்டிசன்கள் மீம்கள் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

IPL memes, MI vs PBKS memes, Rohih Sharma memes, Rohih Sharma troll memes, Rohih Sharma receives crores as salary for Guest role in batting, memes troll on Rohih Sharma, viral memes'கெஸ்ட் ரோலுக்கு கோடி கோடியா சம்பளம் வாங்குறாங்க, ரோஹித் சர்மா வைரல் ஐ.பி.எல் மீம்ஸ், IPL MI vs PBKS memes, Rohih Sharma receives crores as salary for Guest role in batting memes
ரோஹித் சர்மா ட்ரோல் மீம்ஸ்

ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மே 3-ம் தேதி நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து சமூக வலைத்தளங்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணி குறித்த நெட்டிசன்கள் மீம்களைப் பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

கோலி & ரோஹித் இவங்க மட்டும்தான் கிரௌண்டுக்குள்ள வர கொஞ்ச நேர கெஸ்ட் ரோலுக்கு கோடி கோடியா சம்பளம் வாங்குறாங்க.. என்று நெட்டிசன்கள் மீம்கள் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஐ.பி.எல் மீம்களை தொகுத்து உங்களுக்காக இங்கே தருகிறோம். பாருங்கள்:

மும்பை இந்தியன் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சரியாக விளையாடாமல், கொஞ்ச நேரம் மட்டுமே கெஸ்ட்ரோல் மாதிரி பேட்டிங் செய்து அவுட் ஆகி வரும் ரோஹித் சர்மாவை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் மீம்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

“கோலி & ரோஹித் இவங்க மட்டும்தான் கிரௌண்டுக்குள்ள வர கொஞ்ச நேர கெஸ்ட் ரோலுக்கு கோடி கோடியா சம்பளம் வாங்குறாங்க” என்று ரோஹித் உடன் கோலியையும் சேர்த்து கலாய்த்து வருகின்றனர்.

வாத்தியாரே இவனை எதிர்த்து நான் சண்டை செய்றேன். அடிக்கிற அடில இனி நம்ம பக்கமே வர மாட்டான்..

தம்பி என்னப்பா மேட்ச் பாத்தியா? அடுத்து உன்ன பாக்கத்தான் வந்துகிட்டு இருக்கன். ரெடியா இரு..

என்னடா தம்பிங்களா பயமா இருக்கா? இனிமே பாருங்க ரொம்ப பயங்கரமா இருக்கும்..

நாங்களும் 50 அடிப்போம், நாங்களும் 50 அடிப்போம், நாங்களும் 50க்கு மேலையே அடிப்போம் சார்.. சினம் கொண்ட சிங்கத்தை சிறையில அடிக்க நினைக்காதீங்க..

தெரியாம கலாய்ச்சிட்டோம்பா மனசுல ஏதும் வெச்சிக்காத.. நீ வேணுனா திருப்பி கூட கிண்டல் பணிக்கோ..

சரி நம்மளதான் செம அடி அடிச்சாங்க கேப்டன் வந்து அதுக்கு பழிவாங்குவாருனு பாத்தா நமக்கு முன்னாடியே அவரை யாரோ பிரிச்சிட்டு இருக்காங்க போல..

என்னடா அங்க கிரௌண்டுக்கு வந்து விளையாட சொல்லி கோடி கோடியா செலவு பண்ணா.. அன்லிமிடெட் ரீச்சார்ஜ் பண்ணிட்டு ட்விட்டர்ல சண்டை செஞ்சிட்டு இருக்கீங்க? என்ன ரங்கா நியாயமா இது..

அவன் வந்துட்டான் , வந்துட்டான், வந்துட்டான்.. இனிமேதான் ஆட்டமே சூடு பிடிக்க போது..

நாயகன் மும்பை இந்தியன்ஸ் மீண்டும் வரான்.. இனி எட்டு திக்கும், எல்லா டீமுக்கும் பயம்தானே..

சிவனும் சக்தியும் சேர்ந்த மாசுடா, எதிர்த்து நின்ன எந்த டீமா இருந்தாலும் தூசுடா..

சம்பவம் செஞ்சதே அண்ணனை தான் அண்ணா.. அந்த பயலை கண்டுபிடிச்சி பழிவாங்கியே ஆகணும்..

பேச்சாடா பேசுனா பேச்சு.. நடு ஸ்டம்ப்ப காணோம், பந்த காணோம்னு.. பாத்தியா இப்ப உன் டீமையே காணோம்..

செய்யிறதல்லாம் செஞ்சிட்டு முழிக்கிறத பாரு.. டீம் ஜெயிச்சிருக்கலாம்.. ஆனா நீ ஒன்னியும் பண்ணல..

வாத்தியாரே அங்க ரிங்ல வெச்சி ஆர்ச்சர போட்டு லிவிங்ஸ்டன் பொளந்து விட்டுட்டான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Ipl mi vs pbks memes rohih sharma troll memes viral