ipl tamil memes 2022: 15வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமாடியுள்ளன. இந்தியாவில் நீடித்து வரும் கொரோனா அச்சத்தால் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதாங்களில் நடைபெற்று வருகிறது. 25% சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் வீரர்களை உற்சபடுத்தியும், தங்களின் விருப்ப அணிக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
இதற்கிடையில், ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே ஐபிஎல் போட்டிகள் தொடர்பான சுவையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இவை இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வரும் ‘ஐபிஎல்’ மீம்ஸ் குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் மீம்ஸ்:
ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு அணி பவர் பிளேயில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், இடைப்பட்ட ஓவர்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது.
இருப்பினும், அப்போது களத்தில் இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் – ஷாபாஸ் அகமது ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. இதில் ஷாபாஸ் அகமது 44 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஆனால், தொடர் முயற்சியை மேற்கொண்டு வந்த தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணியின் வெற்றியை பிரசாகப்படுத்தினார். அவரின் இந்த அசத்தலான ஆட்டம் குறித்து இணைய வாசிகள் பகிர்ந்துள்ள மீம்ஸ்கள்.


Scenes after KKR victory
— Tributer(fb💯) (@kingkohli_43) March 30, 2022
Credit:Ipl memes insta page#RCBvKKR|#ViratKohli pic.twitter.com/FWkkA60xzw




ஐபிஎல் மீம்ஸ்:

இணையத்தை கலக்கும் இன்றைய வைரல் மீம்ஸ்:






“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“