மும்பையில் நடந்த பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட்டில் சூப்பர்நோவஸ் அணியின் சூப்பர் ஸ்டார் ஹர்மன்பிரீத் கவுர் பறந்து பிடித்த கேட்ச் ரசிகர்களை அசர வைத்தது.
ஐபிஎல் தகுதிப்போட்டி நடைப்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (22.5.18) பெண்களுக்கான ஒரே ஒரு போட்டி கொண்ட ஐபிஎல் போட்டி நடந்தது. இதற்கான முன் அறிவிப்பை பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,ஐபிஎல் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன் பெண்கள் டி20 கிரிக்கெட் ஆட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், டிரைல்பிளேசர்ஸ் – சூப்பர்நோவாஸ் அணிகள் மோதிக் கொண்டன.
ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரைபிலாஸர் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
சூப்பர்நோவஸ் அணிக்கு தலைமை தாங்கிய ஹர்மன்பிரீத் கவுர் அந்த அணியின் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுவார். இந்த ஆட்டத்தில் டிரைல்பிளேசர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அதன் பின்பு 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சூப்பர்நோவஸ் அணி கடைசி வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆடி கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்து 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் திரீல் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது, ஹர்மன்பிரீத் கவுர் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. எதிரணியின் கேப்டன் மந்தனா அடித்த பந்தை முயல் போல் தாவி பிரீத் கவுர் கேட்ச் பிடித்தது முன்னணி கிரிக்கெட் வீரர்களும் பார்த்து பாராட்டியுள்ளனர். அதேசமயம் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு கேட்ச்சை பிடிக்க சூப்பர் கேர்ள் பிரீத் கவுரால் மட்டுமே முடியும் என்றும் சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
Leave it to GIFMaster @anandkatakam to capture that Harmanpreet Kaur catch. What timing of the jump!#WomensT20Challenge pic.twitter.com/HdJ5o6mJO3
— Vinayakk (@vinayakkm) May 22, 2018
https://twitter.com/cricket_freaks/status/998859259252064257