இது நம்ம லிஸ்டிலேயே இல்ல! அமைச்சர் ஜெயக்குமாரை அநியாத்திற்கு புகழ்ந்த விஜய்யின் தந்தை வீடியோ

ஒருபக்கம் விஜய் ஆளுங்கட்சியை-வை சாடும் வகையில் பேசிவிட்டு கூலாக சென்று விட்டார்.

viral trending today video
viral trending today video

viral trending today video : விஜய் படம் vs அதிமுக என பஞ்சை பற்ற வைக்கும் அனைவருக்கும் இந்த வீடியோ பார்த்த பின்பு ஷாக் தான்.

சமீப காலமாக நடிகர் விஜய்யின் படங்கள் அடிக்கடி அரசியல் சர்ச்சையில் சிக்குவது தொடர் கதையாக மாறி வருகிறது. இதற்கு விஜய்யின் மேடை பேச்சும் ஒரு காரணம் என்றே கூறலாம். படத்திற்கு இது சம்மந்தமா? இல்லையா? இசை வெளியீட்டில் இதைப் பற்றி பேசலாமா? வேணாமா? என்ற சந்தேகமே இல்லாமல் அப்போதைய பிரச்சனையை பேசி விட்டு மொத்த மீடியாவுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் கண்டெண்ட் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவார் தளபதி விஜய்.

அடுத்த 1 வாரத்திற்கு விஜய் பேசிய சர்ச்சை தான் மொத்த மீடியாவும்  பேசிட்டு இருக்கும்.  அந்த வகையில் சமீபத்தில் மெர்சலுக்கு பின்னர் அட்லீயுடன் இணைந்துள்ள நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் நாளை (24.101.19) உலகம் முழுவதும் வெளியாகிறது. தீபாவளி சிறப்பாக வெளியாகும் இந்த படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் மின்னல் வேகத்தில் இருக்கிறது.

இந்நிலையில் அதிக கட்டண வசூல் புகார் வருவதால் பிகில் படம் உட்பட எந்த படத்திற்கும் பண்டிகைக்கால சிறப்பு காட்சி கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லை ஆளும் கட்சி வேண்டுமென்றே விஜய் படத்தை குறியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்களும் பரவி வருகின்றன.பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை அமைச்சர்கள் மறக்கவில்லை என்றும் சிலர் பற்ற வைத்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஜீ குடும்ப விருதுகள் 2019 நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகி பெரும் இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம், இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய்யின் தந்தை எஸ். ஏ சந்திரசேகர் பேசிய அந்தர் பல்டி பேச்சு தான். ஒருபக்கம் விஜய் ஆளுங்கட்சியை-வை சாடும் வகையில் பேசிவிட்டு கூலாக சென்று விட்டார்.

ஆனால், அவரின் தந்தை அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை  மேடையிலேயே புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அடிமட்ட தொண்டனாக இருந்து அமைச்சர் பதவி பெற்று உழைப்பால் உயர்ந்தவர் என விஜய்யின் அப்பா அமைச்சர் ஜெயக்குமாரை புகழ, அவர் எழுந்து நின்று நன்றி சொல்ல அட அட பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Iral trending today video viral video zee kutumbam awards promo

Next Story
இன்றைய இளம் காதலர்கள் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்! 72 வயதில் காதலில் உருகும் தம்பதிsocial media viral
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com