ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரானிய பல்கலைக்கழகத்தில் இளம் மாணவி ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து உள்ளாடைகள் உடன் நடந்து எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திப்படி, ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தின் கிளையில் இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், இளம் பெண் தனது உள்ளாடையுடன் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் அமீர் மஹ்ஜோப் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டார், “அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் மற்றும் மனநல கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது” என்று கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் இருப்பிடம் தெரியவில்லை, ஆனால் ஹம்ஷாஹ்ரி டெய்லி நாளிதழ் குறிப்பிடுகையில், “ஒரு தகவலறிந்த வட்டாரம், விசாரணையைத் தொடர்ந்து அவர் ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று சுட்டிக்காட்டியது. அந்தப் பெண் கைது செய்யப்பட்ட போது தாக்கப்பட்டதாக அமீர் கபீர் செய்திமடல் தெரிவித்துள்ளது.
இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்த அம்னெஸ்டி இன்டர்நேஷனல், “ஈரான் அதிகாரிகள் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி பல்கலைக்கழக மாணவரை விடுவிக்க வேண்டும். அவரது விடுதலை நிலுவையில் உள்ளது, அதிகாரிகள் அந்த மாணவியை சித்திரவதையிலிருந்து பாதுகாக்க வேண்டும், அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞரை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட பப்ளிஷிங் ஹவுஸ் பரோன்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எக்ஸ் சமூக வலைதளத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, செயற்பாட்டாளர் மற்றும் இசைக்கலைஞர் எலிகா லீ பான் எழுதினார், “ஈரானில், ஹிஜாப் அணியாமல், ஒரு பெண் தனது ஆடைகளை களைந்து, அவதூறாக தெருக்களில் சுற்றித் திரிகிறார் 'கலாச்சாரக் காவலர்களால்' குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்தப் பெண் ஐ.ஆர்.ஜி.சி படைகளால் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளார். இதுதான் உண்மையான எதிர்ப்பின் துணிச்சலான முகம்.” என்று பதிவிட்டுள்ளார்.
வீடியோவைப் பாருங்கள்:
In Iran, a woman who was accosted by the “morality police” for not wearing hijab removes her clothing & roams the streets in defiance. She has since been arrested by IRGC forces and forcibly disappeared. This is the brave face of true resistance. pic.twitter.com/HhbbEGhKlf
— Elica Le Bon الیکا ل بن (@elicalebon) November 2, 2024
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன், இந்த வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியது. ஒரு எக்ஸ் பயனர் எழுதினார், “தைரியமான பெண். இப்போது அவள் காணாமல் போனதால் அவளுக்கு என்ன நடந்தது என்பதை நினைத்துப் பார்க்க எனக்கு வெறுப்பாக இருக்கிறது. மற்றொரு பயனர், “இந்த பெண்ணுக்கு மிகவும் மரியாதை, அவருடைய நம்பமுடியாத தைரியமத்துக்காக மரியாதை” என்று கருத்துத் தெரிவித்தார்.
“இதுதான் உண்மையான வீரம். நான் நேர்மையாக இருந்தால் என்னை ஒரு கோழையாக உணர வைக்கிறது. பங்கு எடுக்க வேண்டிய நேரம்” என்று மூன்றாவது பயனர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.