ஈரானிய சிகையலங்கார நிபுணர் சயீதே அரியாய் ஒரு மாடலிங் பெண்ணின் தலைமுடியை ‘டீபாட்’ ஆக மாற்றிய வீடியோ சமூக வலைதளங்கள்ல் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்ல, அந்த டீபாட் ஹேர்ஸ்டைலில் அவர் தண்ணீரை ஊற்ற அது 'ஸ்பவுட்' வழியாக வெளியே வருகிறது.
தலைமுடியை வித்தியாசமான ஸ்டைலில் வெட்டிக்கொண்டு வலம் வருபவர்களை பலரும் பாத்திருப்பீர்கள். அவர்கள் தங்கள் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மூலம் மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஈர்ப்பதை கவனித்திருப்பீர்கள். கிரிக்கெட் உலகக் கோப்பை, கால்பந்து உலகக் கோப்பை, பிரபல நடிகர்களின் முகம், மஷ்ரூம், மங்கூஸ் என பல்வேறு ஹேர்ஸ்டைல்களைப் பார்த்திருப்பீர்கள்.
ஒரு சிகையலங்கார் நிபுணர், ஒரு மாடலிங் பெண்ணின் தலைமுடியை ‘டீ பாட்’ போல திருத்தியிருப்பதைப் பாருங்கள். இந்த ஈரானிய சிகையலங்கார நிபுணர் இதை உங்களுக்காக அப்படியே டீ பாட் போல அலங்காரம் செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் சிகை அலங்காரத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அது 3.6 மில்லியன் (36 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ளது.
சிகையலங்கார நிபுணர் சயீதே அரியாய் ஒரு மாடலில் 'டீபாட்' சிகை அலங்காரத்தை உருவாக்கி, பின்னர் ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றுகிறார். (Instagram/@saeidehariaei_hairstylist)
சிகையலங்கார நிபுணர் சயீதே அரியாய், ஒரு மாடலிங் பெண்ணின் தலைமுடியை எப்படி ஒரு ‘டீ பாட்’ போல மாற்றும் அதிசயத்தைப் பாருங்கள். அதைவிட, தலைமுடியால் வடிவமைக்கப்பட்ட ‘டீ பாட்’டிலிருந்து தேநீரை ஊற்றி அனைவரையும் வியக்க வைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“