ஆலங்கட்டி மழை தெரியும்... இது என்ன பூச்சி மழை? பதற வைத்த சம்பவம்

பிரேசில் நாட்டில் திடீரென வானில் இருந்து சிலந்தி மழை போல பொழிந்ததை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வானில் சிலந்திகள் பறக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆனால் இது போன்ற அதிசயம் ஒன்று தான் பிரேசில் நாட்டில் நிகழ்ந்துள்ளது. சமீபக் காலமாகவே வானில் இருந்து பறவை மழை, மீன் மழை பெய்தது என்று அடிக்கடி நாம் கேட்டிருப்போம். சிலர் இது போன்ற வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் சிலந்தி மழை

அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசிலில் உள்ள ஒரு கிராமத்தில் முதியவரின் விவசாய நிலத்திற்கு மேலே சிறிய சிறிய கரும்புள்ளிகள் போல ஏதோ தெரிந்தது. என்ன அது என்று உற்று நோக்கியபோது அப்பகுதியில் இருந்த பலரும் அதிர்ந்து போனார்கள்.

நூற்றுக்கணக்கான சிலந்திகள் வானில் பறந்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் அப்பகுதியில் பரபரப்பு அதிகரித்தது. சட்டென்று பார்க்கும்போது சிலந்தி மழையாக பெய்வது போல் காட்சியளித்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பல மணிநேரம் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் என அனைத்தையும் அடைத்து உள்ளேயே இருந்தனர். ஆனால் இது குறித்து அப்பகுதியில் உள்ள வயதான மூதாட்டி ஒருவர் கூறும்போது, “நீங்கள் வீட்யோ புகைப்படத்தில் பார்த்ததை விட அதிகமான சிலந்திகள் இருந்தது. இது முதம் முறை அல்ல, மாலை நேரங்கள் அதிக முறை இது போல் சிலந்திகள் பறந்திருக்கின்றது. எப்போதெல்லாம் வானிலை சூடாக இருக்கிறதோ அப்போதெல்லாம் இந்த சிலந்திகள் பறக்கின்றது” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close