இதுவும் ஒரு வகை “கட்டிப்பிடி” வைத்தியம் தானோ – மரத்தை கட்டி அணைக்கும் இஸ்ரேலியர்கள்

Hugging trees : இயற்கையிடம் சரணடைய வேண்டும். மரங்கள் நிறைந்த வனப்பகுதிக்கு செல்ல வேண்டும்

By: Updated: July 15, 2020, 07:54:50 AM

கொரோனா ஊரடங்கால், குடும்பத்தில் இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் இடைவெளி பின்பற்றி வரும் நிலையிலும், நண்பர்கள் இன்றி பலர் தவித்து வரும் நிலையில், மரங்களை கட்டிப்பிடித்து ஆறுதல் தேடிவருகின்றனர் இந்த நாட்டவர்கள்….

 

 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தனிநபர் இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களிடையே ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் புதுவகையான “கட்டிப்பிடி” வைத்தியத்தை இஸ்ரேல் நாட்டின் இயற்கை மற்றும் பூங்காக்கள் நிர்வகிக்கும் அமைப்பு, மரங்களை கட்டிப்பிடிப்பதன் மூலம், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரிவை விரட்டலாம் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அபோலோவியா தேசிய பூங்காவின் வர்த்தகப்பிரிவு இயக்குனர் ஓரிட் ஸ்டெய்ன்பெல்ட் கூறியதாவது, இந்த இக்கட்டான கொரோனா காலத்தில், நாம் அனைவரும் இயற்கையிடம் சரணடைய வேண்டும். மரங்கள் நிறைந்த வனப்பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு நமக்குத்தேவையான பிராணவாயு அதிகளவில் கிடைக்கும் என்பதால், அங்கு நாம் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். பின் அங்குள்ள மரத்தை கட்டிப்பிடித்து நாம் அதன்மீது அன்பு செலுத்த, அது அதற்கு பிரதிபலனாக நமக்கு அன்பு செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல் அவிவ் நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்போலோனியா பூங்காவில், இந்த பூங்கா நிர்வாகத்தினர் மரத்தை கட்டியணைக்கும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மனித இனத்தின் அடிப்படையான தேவை யாதெனில் மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதுதான். மற்றவர்களை தொட்டுக்கொண்டோ , கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்தால், அவர்கள் சந்தோசமாகவும் மற்றும் உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பதாக உணர்வர். தாத்தா, பாட்டிகள் போன்றோர், தங்களது பேரக்குழந்தைகளை கட்டி அணைக்க முடியாததால், அவர்கள் அதிகம் உடல்நலம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பூங்காவிற்கு வெளியே இருந்த மோஷே ஹசன், தனது பெண் நண்பருடன் சேர்ந்து மரத்தை கட்டிப்பிடித்து கொண்டிருந்தார்.
இந்த கொரோனா ஊரடங்கு நாட்களில் நாம் மற்றவர்களையோ, நண்பர்களையோ, நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளையோ கட்டிப்பிடிக்க இயலாத நிலையில் உள்ளதாக ஹாசன் கூறினார்.

 

சர்வதேச அளவில், கொரோனா வைரஸ் பாதிப்பு மார்ச் மாதத்தில் அதிகரிக்க துவங்கியது. இஸ்ரேல் நாட்டில் மார்ச் மாத இறுதிவாக்கிலேயே அதிகளவிலான பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.

 

வெளியிடங்களில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடுதல், கட்டிப்பிடித்தல் போன்ற நேரடி தொடர்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் திறந்தவெளியில் மட்டுமே இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்து வனத்துறை கடந்து ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்திய மரங்களை கட்டியணைப்போம் என்பதன் தொடர்ச்சியாகவே, இஸ்ரேல் நிர்வாகம், மரங்களை கட்டியணைக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – People in Israel are hugging trees to beat COVID-19 lockdown blues

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

Web Title:Israel coronavirus covid 19 hugging trees lockdown blues

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X