15 வருசம் வேலைக்கே போகாம சம்பளம் வாங்கிய ஊழியர்... பலே கில்லாடி தான் போங்க!

5 லட்சம் யூரோக்களுக்கு மேல் 15 ஆண்டுகள் சம்பளம் பெற்ற அவர் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லவில்லையாம்

5 லட்சம் யூரோக்களுக்கு மேல் 15 ஆண்டுகள் சம்பளம் பெற்ற அவர் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லவில்லையாம்

author-image
WebDesk
New Update
Italian hospital staff skips work for 15 years, but draws salary every month

Italian hospital staff skips work for 15 years, but draws salary every month : அட நாமெல்லாம் வேலைக்கு போகலைன்னா ஒரு வாரம் தான். அப்பறம் வீட்டுக்கு கெளம்புங்க தம்பின்னு அனுப்பி வச்சுருவாங்க. ஆனா இங்க இவருக்கு தில்ல பாத்தீங்கன்னா அசந்து தான் போய்ருவீங்க. இத்தாலியில் உள்ள கடன்ஜாரோ பகுதியில் உள்ள கலப்ரியன் நகரில் அமைந்துள்ளது புக்லீஸ் சியாக்கோ மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

Advertisment

லா ஸ்டாம்பா பத்திரிக்கையின் அறிவிப்பு படி கடந்த 15 ஆண்டுகளாக வேலைக்கே செல்லாமல் ஆனால் மாதம் மாதம் சம்பளம் வாங்கியுள்ளார் அந்த ஊழியர். மருத்துவமனை மேலாளர்கள், ஊழியர்கள் என அனைத்து மட்டத்தில் இருந்தும் 7 பேர் மீது வேலை துஷ்ப்ரியோகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடன்ஜாரோ பகுதியில் உள்ள எக்கானமிக் ஃபினான்சியல் காவல்துறை பிரிவு சால்வடோர் ஸ்குமாஸ் என்பவரை அடையாளம் கண்டுள்ளது. இவர் 2005ம் ஆண்டு அந்த மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார். தீயணைப்பு பிரிவில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது இருந்து அவருக்கு 5,38,000 யூரோக்கள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அரசு துறைகளில் வேலைக்கு வராமல் பணி துஷ்பரியோகம் செய்யும் நபர்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. பணிக்கு வராமல் இருப்பதை குறிக்க முயன்ற மருத்துவமனை இயக்குநரை இவர் மிரட்டியதாக தெரிய வந்துள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: