ஏப்பா தம்பி அதென்ன மெரினா பீச்சா? இந்த ஓட்டம் ஓடுறியே! பனிமலையில் ஓட்டம், வைரலாகும் வீடியோ

பனி மலைகளில் இருந்து குதித்தும், பனி அதிகமாக பரவிய இடங்களில் அசால்ட்டாக ஸ்கையிங் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பனி மலைகளில் இருந்து குதித்தும், பனி அதிகமாக பரவிய இடங்களில் அசால்ட்டாக ஸ்கையிங் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ஏப்பா தம்பி அதென்ன மெரினா பீச்சா? இந்த ஓட்டம் ஓடுறியே! பனிமலையில் ஓட்டம், வைரலாகும் வீடியோ

Italian skier completes stunning ultimate run on the peaks : இத்தாலியை சேர்ந்தவர் மார்கஸ் ஈடர். ஃப்ரீ ஸ்டைல் ஸ்கையிங் விளையாட்டு வீரரான அவர் ஸ்விட்சர்லாந்தில் ஜெர்மாட் நகரில் இருக்கும் பனிமலையில் ஸ்கையிங்க் செய்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

முற்றிலுமாக பனியால் மூடப்பட்ட இந்த பகுதியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் தன்னுடைய முழுமையான திறமையை வெளிப்படுத்தும் 10 நிமிட வீடியோ க்ளிப் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்டு அதனை எடிட் செய்து தற்போது வெளியிட்டுள்ளனர். ரெட்புல்லின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை பார்க்கும் போதே ஜில்லென்ற உணர்வு வந்துவிடுகிறது. பனி மலைகளில் இருந்து குதித்தும், பனி அதிகமாக பரவிய இடங்களில் அசால்ட்டாக ஸ்கையிங் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் கூறவும்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: