Advertisment

அனகோண்டாவை கடித்து இழுக்கும் கருஞ் சிறுத்தை: வைரல் வீடியோ

jaguar fighting an anaconda very rare video : இவை மனிதர்களைத் தாக்கியிருந்தாலும், அவர்களை இரையாகக் கொள்வதில்லை

author-image
WebDesk
New Update
அனகோண்டாவை கடித்து இழுக்கும் கருஞ் சிறுத்தை: வைரல் வீடியோ

10 அடி நீளமுள்ள அனகோண்டா பாம்புடன் கருஞ் சிறுத்தை பல்லுகட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Advertisment

உலகிலேயே மிகப் பெரிய, நீளமான பாம்பாக  அனகோண்டா விளங்குகிறது. இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன.

 

 

நீர்நிலை ஒன்றில் நின்றுக் கொண்டிருந்த கருஞ் சிறுத்தை ஒன்றை, அனகோண்டா  நீருக்குள் இழுத்து தாக்க  முயற்சித்தது. இதனை, சுதாரித்துக் கொண்ட  கருஞ் சிறுத்தை உடனடியாக பாம்பை  தாக்கத் தொடங்கியது. ஒருகட்டத்தில், அனகோண்டா பாம்பை நீரிலிருந்து  வெளியே இழுக்க முற்படுகிறது.

 

 

நீரிலேயே வாழும் இவை குறிப்பாக அமேசான் ஆறு போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை மனிதர்களைத் தாக்கியிருந்தாலும், அவர்களை இரையாகக் கொள்வதில்லை. இவை பொதுவாக மீன்கள், ஆற்றுக்கோழிகள், அரிதாக ஆற்றுக்கு அருகே வரும் ஆடுகள், குதிரைகளையே இரையாக உண்ணுகின்றன.

அனகோண்டாக்களால் தாக்கப்படுவதைக் கருவாகக் கொண்டு பல படக் கதைகள், திரைப்படங்கள் மற்றும் சாகசக் கதைகள் அமேசான் காட்டுப் பின்னணியில் புனையப்பட்டுள்ளன

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment