உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில், பங்கேற்ற காளை ஒன்று யாராலும் அடக்கமுடியாமல் நின்று விளையாடியுள்ளது. அடக்க முயன்ற மாடுபிடி வீரர் ஒருவரை அந்த காளை அவரை கீழே தள்ளி தூக்கி வீசி பந்தாடியுள்ளது. அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான ஜல்லிக்கட்டுப் போட்டி இரண்டு நாட்களாக தமிழகத்தில் நடைபெற்றுவருகிறது. விவசாய உற்பத்தி உழைப்பில் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பைக் கொண்டாடும் விதமாக பண்டைய தமிழர்கள் ஏறுதழுவுதல் என்னும் விழாவை நடத்திவந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய ஜல்லிக்கட்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. ஜல்லிக்கட்டு விழாவில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ்பெற்றவை ஆகும்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது. போட்டியில் காளைகளை அடக்க பல மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடும்படியாக பல காளைகளில் போட்டியில் பங்கேற்று வெற்றிவாகை சூடியது.
இதுதான் ஜல்லிக்கட்டு..???????????? pic.twitter.com/ILG1VP87oq
— நெத்திலி கருவாடு ???????????? (@ThiliphanT) January 16, 2020
அந்த வகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாய்ந்து வந்த காளை ஒன்றை வீரர்கள் பாய்ந்து அணைய முயன்றனர். ஆனால், அவர்கள் எல்லோரையும் தூக்கி வீசிவிட்டு ஒருவரும் அருகே நெருங்க முடியாத அளவுக்கு நெருப்பு போல நின்று விளையாடியது. அப்போது ஒரு மாடுபிடிவீரர் பாய்ந்து காளையை அணைய முயற்சித்தபோது அந்த காளை அவரைக் கீழே தள்ளி தனது கொம்புகளால் குத்தி மேலே வீசி பந்தாடியது. பாவம் அந்த வீரர் காளை தூக்கி வீசியதில் மாட்டுக்கு பின்பக்கம் பறந்து போய் விழுந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகிவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.