ரத்த தானம் செய்து 2.4 மில்லியன் குழந்தைகள் உயிரைக் காப்பாற்றியவர்... ஜேம்ஸ் ஹாரிசன் மரணம்!

ரத்த தானத்தின் மூலம் சுமார் 2.4 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலிவின் ஜேம்ஸ் ஹாரிசன், தனது 88-வது வயதில் காலமானார்.

author-image
WebDesk
New Update
 James Harrison Australian blood donor who saved 2 4 million babies passes away Tamil News

ரத்த தானத்தின் மூலம் சுமார் 2.4 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலிவின் ஜேம்ஸ் ஹாரிசன், தனது 88-வது வயதில் காலமானார்.

ரத்த தானத்தின் மூலம் சுமார் 2.4 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலிவின் ஜேம்ஸ் ஹாரிசன், தனது 88-வது வயதில் காலமானார். "தங்கக் கரம் கொண்ட மனிதர்" (man with the golden arm) என்று அழைக்கப்படும் ஹாரிசன் பிப்ரவரி 17 அன்று நியூ சவுத் வேல்ஸில் இறந்தார் என்று பி.பி.சி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: James Harrison, Australian blood donor who saved 2.4 million babies, passes away

1954 ஆம் ஆண்டு பிறந்த ஜேம்ஸ் ஹாரிசன், தனது 18 வயதில் இருந்து ரத்த தானம் செய்யத் தொடங்கி இருக்கிறார். தனது வாழ்நாள் முழுவதும் ரத்த தானம் செய்து வந்த அவர் 2018 இல் தனது 81-வது வயதில் ஓய்வு பெற்றார். அதுவரை அவர் 1,173 முறை ரத்த தானம் செய்தார். அவரது ரத்த தான நன்கொடைகள் உலகம் முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளைக் காப்பாற்றியது. ஹாரிசனின் பிளாஸ்மாவில் ஆன்டி-டி எனப்படும் அரிய ஆன்டிபாடி உள்ளது. இது பிரசவத்தின் போது தாய்மார்களிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் ஆன்டிபாடிகள் கடத்தப்படுவதைத் தடுக்கிறது. 

ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்தச் சேவையின்படி, ஹாரிசன் 14 வயதில் பெரிய மார்பு அறுவை சிகிச்சையின் போது ரத்தமாற்றத்தைப் பெற்ற பிறகு நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தார். 2005 ஆம் ஆண்டில், அதிக ரத்த பிளாஸ்மா தானம் செய்யப்பட்ட உலக சாதனையை அவர் படைத்தார். இருப்பினும், 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்தவரால் அவரது சாதனை முறியடிக்கப்பட்டது. 

Advertisment
Advertisements

ஜேம்ஸ் ஹாரிசனின் மகள் டிரேசி மெல்லோஷிப், தனது தந்தை பல உயிர்களைக் காப்பாற்றியதில் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறினார். "அவர் எப்பொழுதும் அது வலிக்காது என்று கூறினார். நீங்கள் காப்பாற்றும் உயிர் உங்களுடையதாக இருக்கலாம் எனவும் அவர் சொல்வார்" என்று அவர் பி.பி.சி-யிடம் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் வால்டர் மற்றும் எலிசா ஹால் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் ரிசர்ச் ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சேவை (லைஃப் ப்ளட்) உடன் இணைந்து, ஹாரிசனின் ஆன்டிபாடிகளை ஆய்வகத்தில் பிரதிபலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பி.பி.சி-யின்படி, உலகெங்கிலும் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு நம்பகமான மற்றும் அணுகக்கூடிய சிகிச்சையை உறுதிசெய்வது, ஆன்டி-டியின் செயற்கைப் பதிப்பை உருவாக்குவதே அவர்களின் குறிக்கோள்.

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: