ஜப்பானின் கியூஷுவில் உள்ள நகரில் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒரு நபர், 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாகக் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Japanese man says he broke into 1,000 homes: ‘it’s a hobby of mine’
ஜப்பான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், சமீபத்திய சம்பவத்திற்குப் பிறகு காவலில் வைக்கப்பட்ட அந்த நபர், ‘த்ரில்லிங்காக’ இருக்கிறது என்று கூறியதாக என்று தெரிவித்துள்ளது. “மற்றவர்களின் வீடுகளுக்குள் நுழைவது என்னுடைய ஒரு பொழுதுபோக்கு, நான் அதை 1,000 தடவைகளுக்கு மேல் செய்திருக்கிறேன். யாராவது என்னைக் கண்டுபிடிப்பார்களா இல்லையா என்று யோசிக்கும்போது என் உள்ளங்கைகள் வியர்க்கும் அளவுக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும், அது மன அழுத்தத்தை குறைக்கிறது” என்று பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர் கூறியதாக தி ஜப்பான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
டஸைஃபு நகரில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், நவம்பர் 25-ம் தேதி மதியம் 1 மணியளவில் சுயதொழில் செய்யும் நபரின் வளாகத்திற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். அந்த நபரும் அவரது மனைவியும் அவரைத் தங்கள் தோட்டத்தில் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தடதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக எந்த திருட்டு சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், குற்றங்களின் உளவியல் தன்மை காரணமாக அதிகாரிகள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020-ம் ஆண்டில், இதேபோல வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் ஜப்பானில் பதிவாகியுள்ளது. தகவல்களின்படி, காணாமல் போன தனது குழந்தைகளைத் தேடுவதற்காக பிரிந்த மாமியார்களின் அடுக்குமாடி கட்டிடத்திற்குச் சென்றபோது அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் ஆஸ்திரேலிய நபர் ஒருவர் டோக்கியோவில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“