பொதுவாக எட்டு மணிநேரம் தூங்குவது பெரியவர்களுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது, நிபுணர்கள் தொடர்ந்து இவ்வளவு தூக்கம் பெறுவது அறிவாற்றல் செயல்பாடு, மனநிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று கூறுகிறார்கள். இருப்பினும், ஜப்பானில் ஒரு நபர் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறார். அதாவது, அவர் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே தூங்குகிறார்.
ஆங்கிலத்தில் படிக்க: This man has slept only 30 minutes a day for 12 years, claims it improved work efficiency
40 வயதான டெய்சுகே ஹோரி, தனது வாழ்க்கையை இரட்டிப்பாக்க குறைந்தபட்ச தூக்கத்திற்காக தனது மூளை மற்றும் உடலைப் பயிற்றுவித்ததாகக் கூறினார். சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மேற்கு ஜப்பானில் உள்ள ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த ஹோரி, ஒரு நாளைக்கு 30-45 நிமிடங்களுக்கு மட்டுமே தனது தூக்கத்தை குறைக்க முடிந்தது, மேலும் அது தனது வேலைத் திறனை மேம்படுத்தியதாகக் கூறினார்.
டெய்சுகே ஹோரி, ஒரு தொழில்முனைவோர், வேலையில் கவனம் செலுத்துவதற்கு நீண்ட தூக்கத்தை விட உயர்தர தூக்கம் முக்கியமானது என்று கூறினார். “உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் விளையாடினால் அல்லது காபி குடித்தால், நீங்கள் தூக்கத்தைத் தடுக்கலாம். தங்கள் வேலையில் தொடர்ந்து கவனம் தேவைப்படுபவர்கள் நீண்ட தூக்கத்தை விட உயர்தர உறக்கத்தால் அதிகம் பயனடைகிறார்கள். உதாரணமாக, மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குறுகிய ஓய்வு காலங்களைக் கொண்டுள்ளனர். ஆனால், அதிக செயல்திறனைப் பேணுகிறார்கள்” என்று டெய்சுகே ஹோரி ஹாங்காங் செய்தித்தாளிடம் கூறினார்.
டெய்சுகே ஹோரி கூறுவதை நெருக்கமாகப் பார்க்க, ஜப்பானின் யோமியூரி தொலைக்காட்சி, வில் யூ கோ வித் மீ என்ற ரியாலிட்டி ஷோவில் அவரை 3 நாட்கள் ஆய்வு செய்தது. நிகழ்ச்சியின்படி, ஹோரி ஒருமுறை வெறும் 26 நிமிடங்கள் தூங்கி உற்சாகத்துடன் எழுந்தார். காலை உணவுக்குப் பிறகு வேலைக்குச் சென்று ஜிம்மிற்குச் சென்றார்.
2016 ஆம் ஆண்டில், ஹோரி ஒரு புதிய பயணத்தைத் தொடங்கினார். ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர்ஸ் பயிற்சி சங்கத்தை நிறுவினார். பங்கேற்பாளர்களில் ஒருவர் பயிற்சிக்குப் பிறகு, தனது தூக்கத்தை 8 மணி நேரத்திலிருந்து 90 நிமிடங்களுக்கு குறைத்து 4 அதைத் தொடர்ந்ததாகக் கூறினார். அவர் தனது தோல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதாக கூறினார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட், இசை, மெக்கானிக்கல் டிசைன் மற்றும் ஓவியங்களை விரும்பும் டெய்சுகே ஹோரி, 2,000 மாணவர்களுக்கு அல்ட்ரா ஷார்ட் ஸ்லீப்பர்களாக மாற பயிற்சி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.