அட “ஸ்பேஸ்க்கு” போறேன்னு சொன்னது குத்தமாய்யா? என்னா அடி! அமேசான் நிறுவனரை கதறவிட்ட பெட்டிசன்கள்

பணக்காரர்கள் பூமியில் வாழமாட்டார்கள். விண்வெளியிலும் வாழ மாட்டார்கள். ஆனால் அவர்கள் விண்வெளியை தேர்வு செய்து அங்கே இருப்பது தான் நல்லது – என மனுக்கள் எழுதி மக்களிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.

Viral News : சில தினங்களுக்கு முன்பு விண்வெளிக்கு செல்கிறேன் என்று அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கூறியிருந்த நிலையில், அவர் பூமிக்கு திரும்பப் கூடாது என்று பலரும் மனுக்களை எழுத ஆரம்பித்துள்ளனர். ஒரு செயல்பாட்டுக்கு எதிராக பெட்டிசன் தயாரித்து அதற்கு ஆதரவு அளிக்கும் படி கேட்பது தான் இப்போதைய ட்ரெண்ட். அந்த வகையில் ஜெஃப் திரும்பி வரவே வேண்டாம் என்று எழுதப்பட்ட இரண்டு மனுக்களை 56 ஆயிரம் பேர் ஆதரித்துள்ளனர்.

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் திட்டம் ஒன்றை துவங்கியுள்ளது ப்ளூ ஆரிஜின் என்ற நிறுவனம். இதில் தானும், தன்னுடைய சகோதரர் மார்க் பெசோஸூம் விண்ணுக்கு செல்வதாக ஜூன் 7ம் தேதி அறிவித்திருந்தார். இவர்களை அழைத்துக் கொண்டு செல்லும் விண்கலம் ஜூலை 20ம் தேதி விண்ணில் பாய்கிறது.

“பணக்காரர்கள் பூமியில் வாழமாட்டார்கள். விண்வெளியிலும் வாழ மாட்டார்கள். ஆனால் அவர்கள் விண்வெளியை தேர்வு செய்து அங்கே இருப்பது தான் நல்லது என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். பலரும் இந்த மனுக்களை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து இதற்கு ஆதரவு திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jeff bezos is going to space and people dont want him to return back

Next Story
ஒரு தர்ப்பூசணியை ஒரே கடியில் காலி செய்வது எப்படி? நமக்கு பாடம் எடுக்கும் “ஹிப்போ” – வைரல் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X