ஜார்கண்டில் நெஞ்சை உலுக்கும் காட்சி: இடிந்த பாலத்தில் மூங்கில் ஏணியில் ஏறி பள்ளி செல்லும் மாணவர்கள்: வரைல் வீடியோ

ஜார்க்கண்டில் இடிந்து விழுந்த பாலத்தின் இடிபாடுகளின் மீது, சிறிதும் தயக்கமின்றி மூங்கில் ஏணியில் ஏறி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

ஜார்க்கண்டில் இடிந்து விழுந்த பாலத்தின் இடிபாடுகளின் மீது, சிறிதும் தயக்கமின்றி மூங்கில் ஏணியில் ஏறி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
collapse bridge 1

சமீபத்தில் குஜராத்தின் வதோதராவில் பாலம் இடிந்து பலர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், ஜார்கண்டிலிருந்து வந்துள்ள இந்தக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கிறது. Photograph: (ANI/X)

ஒருபுறம் கனமழை, மறுபுறம் கல்வியின் மீதான தணியாத தாகம், ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், இந்தியாவின் கிராமப்புற உள்கட்டமைப்பு சவால்களையும், குழந்தைகளின் கல்வி ஆர்வத்தையும் ஒரே நேரத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஜார்க்கண்டில் இடிந்து விழுந்த பாலத்தின் இடிபாடுகளின் மீது, சிறிதும் தயக்கமின்றி மூங்கில் ஏணியில் ஏறி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

Advertisment

கடந்த ஜூன் 19-ஆம் தேதி பெய்த கனமழையால், குந்தி-டோர்பா பிரதான சாலையில் உள்ள பெலவுல் கிராமத்தில் பனாய் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் முற்றிலும் சேதமடைந்தது. இது அப்பகுதி மக்களின் தினசரி வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. குறிப்பாக, தனியார் வாகன வசதி இல்லாதவர்கள், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு பெரும் போராட்டத்தைச் சந்திக்கின்றனர்.

சமீபத்தில் குஜராத்தின் வதோதராவில் பாலம் இடிந்து பலர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், ஜார்கண்டிலிருந்து வந்துள்ள இந்தக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கிறது. வைரலாகும் வீடியோவில், கள்ளமறியாத சிறுவர்கள், ஆபத்தான அந்த இடிபாடுகளைக் கடந்து, உடைந்த பாலத்தின் மீதுள்ள தற்காலிக மூங்கில் ஏணியில் ஏறி, உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்குச் செல்வது கண்ணீர் வரவழைக்கிறது. சில குழந்தைகள் பெரியவர்களின் உதவியுடன் ஏறிச் செல்ல, சிலர் துணிச்சலாக தனியாகவே இந்த ஆபத்தான ஏறுதலை மேற்கொள்கின்றனர்.

வீடியோவைப் பாருங்கள்:

Advertisment
Advertisements

இந்த பாலம் இடிந்து விழுந்ததால், கிராம மக்களின் தினசரி வாழ்க்கை மட்டுமல்ல, குழந்தைகளின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது. பாதுகாப்பு அல்லது கல்வி என்ற கேள்விக்குறிக்கு மத்தியில், குழந்தைகள் கல்வியைத் தேர்வு செய்து, ஆபத்தான வழியைக் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். கிராம மக்களே இந்தத் தற்காலிக மூங்கில் ஏணியை அமைத்து, குழந்தைகளின் பயணத்திற்கு உதவியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய இன்சார்ஜ் SDO அரவிந்த் ஓஜா, தற்போது பாதுகாப்பான மாற்றுச் சாலை அமைக்கப்பட்டதாகவும், தற்காலிக மூங்கில் ஏணி அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், கல்விக்கான இந்த போராட்டமும், உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அவசியமும் இன்றும் நம் கண்முன் நிற்கும் கேள்விகளாகவே உள்ளன.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: