Advertisment

சென்னை ஜவுளிக் கடையில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகளைத் திருடிய பெண்கள்: சி.சி.டிவி வீடியோ

சென்னையில் ஒரு ஜவுளிக் கடையில் பட்டு சேலைகளைத் திருடிய பெண்கள் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு கும்பல் என்று நம்பப்படுகிறது.

author-image
WebDesk
New Update
robbing saree

சென்னை ஜவுளிக் கடையில் பட்டு சேலைகளைத் திருடிய பெண்கள்

Viral Video: சென்னையில் ஜவுளிக் கடையில் பெண்கள் பட்டு சேலைகளைத் திருடிய பழைய சி.சி.டி வீடியோ இன்ஸ்டாகிராமில் மீண்டும் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் நகைச்சுவையாக கம்மெண்ட் செய்து வருகின்றனர். சென்னையில் ஜவுளிக் கடையில் பட்டு சேலைகளைத் திருடிய பெண்கள் ஆந்திராவைச் சேர்ந்த கும்பல் என்று நம்பப்படுகிறது.

Advertisment

சென்னையில் ஜவுளிக் கடையில் பட்டு சேலைகளைத் திருடிய சி.சி.டி வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அந்த பெண்கள் கும்பல் திருடப்பட்ட பட்டு சேலைகளை சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு கொரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆங்கிலத்தில் படிக்க: ‘Just robbing like a wow’: Old CCTV footage of Chennai silk sari heist resurfaces on Instagram

இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னையின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில், பெண்கள் கும்பல் ஒன்று துணிச்சலாக பட்டு சேலைகளைத் திருட முயற்சி செய்து, போலீசாரை திகைக்க வைத்தது.

சென்னை தி நகரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் அக்டோபர் 28-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் இருந்து வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் முகமூடி அணிந்த மூன்று பெண்களைக் கொண்ட கும்பல், ஆடம்பரமான விலை உயர்ந்த சேலைகளை வேகமாக எடுத்து மறைத்து வைத்து திருடுவது கண்காணிப்பு கேமராக்களில் சிக்கியது. அவர்கள் 10 நிமிடங்களில் தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைளை திருடியுள்ளனர்.

புகாரின் பேரில், சி.சி.டிவி காட்சிகளை வைத்து உடனே போலீசார் விரைந்து சென்று திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். ஆனால், இந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக, தாங்கள் கைது செய்யப்படலாம் என பயந்த அந்த கும்பல், திருடப்பட்ட பட்டு சேலைகளை சாஸ்திரி நகரில் உள்ள காவல் நிலையத்துக்கு  கூரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

சென்னையில் நடந்த அசாதாரணமான இந்த பட்டு சேலைகள் திருட்டு சமூக ஊடக பயனர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த வீடியோவைப் பார்த்த இன்ஸ்டாகிராமில் உள்ள பயனர்கள் சிலர் கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் பிரமிப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பதாகக் கம்மெண்ட் செய்து வருகின்றனர்  பெண்கள் பட்டு சேலைகளைத் திருடும் வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், “மிகவும் அழகானது... மிகவும் நேர்த்தியானது....” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.

மற்றொரு பயனர்,  “இந்த தந்திரத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்” என்று கருத்துத் தெரிவித்தார். மேலும், இன்னொரு பயனர்,  “இது எப்படி சாத்தியம்?” என்று கேட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment