வேட்டி, சட்டை அணிந்து தை பொங்கலை கொண்டாடிய கனடா பிரதமர் ஜஸ்டின்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு வேட்டி, சட்டையுடன் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு வேட்டி, சட்டையுடன் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு பலமுறை இந்திய பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கலாச்சாரத்தை தான் மதிப்பதாகவும் கூறியுள்ளார். இந்திய சுதந்திர தினம், தீபாவளி, ஈகை திருநாள் உள்ளிட்ட பண்டிகைகளை கனடாவில் உள்ள இந்தியர்களுடன் ஜஸ்டின் ட்ரூடு கொண்டாடியுள்ளார்.

அந்த வகையில், வேட்டி, சட்டை அணிந்து ஜஸ்டின் ட்ரூடு, அங்குள்ள இந்தியர்களுடன் இணைந்து பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளன.

அந்த புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜஸ்டின் ட்ரூடு, “இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்! தமிழ் மரபு மாதம் மற்றும் தை பொங்கலை சிறப்பாக கொண்டாடினோம்”, என குறிப்பிட்டிருந்தார்.

அவருடன் டொரண்டோ மேயர் ஜான் டோரியும் பொங்கல் கொண்டாடினார்.

×Close
×Close