நாடாளுமன்றத்தில் இருந்து நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ; நாக்கை நீட்டி கொடுத்த போஸ் வைரல்!

கனடாவின் புதிய பிரதமராக மைக் கார்னி பதவியேற்க உள்ள நிலையில் தனது நாற்காலியை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ தனது நாக்கை நீட்டி போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Justin Trudeau toungue out

ஜஸ்டின் ட்ரூடோ கையில் நாற்காலியுடன் தனது நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. (Photo: Instagram/ Reuters)

கனடா தேர்தலில் கார்னியின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அதிகார மாற்றத்தைத் தொடங்குவதற்காக, புதிய லிபரல் தலைவரும் பிரதமராக நியமிக்கப்பட்டவருமான மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ திங்கள்கிழமை சந்தித்தார்.

Advertisment

இதற்கிடையில், ஜஸ்டின் ட்ரூடோ தனது அரசாங்க வேலைகளை முடிக்கத் தொடங்கியுள்ளார். ட்ரூடோ தனது ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் நாற்காலியை நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும் தருணத்தை ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் படம் பிடித்தார். இது அவரது பதவிக்காலம் முடிவடைவதைக் குறிக்கும் ஒரு அடையாள ரீதியான ஒரு சமிக்ஞை ஆகும். ஜஸ்டின் ட்ரூடோ தனது நாக்கை நீட்டியபடி, கையில் நாற்காலியுடன் இருப்பதையும் காட்டும் இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலானது. இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருதரப்பினராலும் பரவலாகப் பகிரப்பட்டது.

இந்தப் படம் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை விரைவாக ஈர்த்தது, அவர்கள் அதிகார மாற்றத்தின் போது ட்ரூடோவின் நகைச்சுவை உணர்வைப் பாராட்டினர். பலர் அந்த தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர், "என்ன ஒரு ஷாட்!" போன்ற கருத்துகளுடன், இந்த விளையாட்டுத்தனமான சைகைக்கு பொதுமக்களின் பாராட்டு கிடைத்துள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகும்போது அவர் வினோதமாகப் பிரியாவிடை பெறுவதற்கான அடையாளமாக இந்தப் படம் மாறியுள்ளது.

Advertisment
Advertisements

ஜஸ்டின் இந்த புகைப்படம் குறித்து ஒரு பயனர் எழுதுகையில், “இந்த படம் ட்ரூடோவின் எதிர்வினை அனைத்தையும் கூறுகிறது, இறுதியாக நான் ஒரு சாதாரண வாழ்க்கையைக் கொண்டிருக்கிறேன், இயற்கையை ரசிக்கிறேன்” என்று எழுதினார்.

மற்றொரு பயனர், “என்ன ஒரு ஷாட்! அருமையான படம்,” என்று பாராட்டினார். “ஆமாம், அருமையான புகைப்படம். இதை காப்பகங்களில் சேர்த்து வையுங்கள்” என்று மற்றொரு பயனர் பதிவிட்டார்.

“ஜஸ்டின் ட்ரூடோ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார், நான் அவரை மிஸ் பண்ணப் போகிறேன், ஆனால் அவர் இப்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடத் தகுதியானவர்” என்று ஒரு பயனர் பதிவிட்டார்.

“ட்ரூடோ கனடாவை 10 ஆண்டுகளாக சூறையாடினார்... அப்படியானால் அவர் ஏன் வெளியேறும் வழியில் ஒரு நாற்காலியைத் திருடக்கூடாது?” என்று மற்றொரு பயனர் கூறினார்.

ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரியாவிடை உரையில் கண்ணீர் விட்டார். பிரியாவிடை உரையில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஜஸ்டின் ட்ருடோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கடைசியாக விமர்சித்தார். ஒட்டாவாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த லிபரல் தலைமைத்துவ நிகழ்வின் போது மேடையில், அவரது மகள் எல்லா-கிரேஸ் அவரைப் பேச அழைத்த பிறகு, ட்ரூடோ தனது கண்களை டிஷ்யூ காகிதத்தால் துடைத்துக் கொண்டிருந்தார்.

 “கடந்த 10 ஆண்டுகளில், சவால்கள் இருந்தன, நெருக்கடிக்குப் பின் நெருக்கடி கனடியர்கள் மீது வீசப்பட்டது, ஆனால் ஒவ்வொரு நெருக்கடியிலும், கனடியர்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டியுள்ளனர். நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம், ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்றுள்ளோம். ஒவ்வொரு முறையும், நாங்கள் இன்னும் வலுவாக உருவெடுத்துள்ளோம்” என்று ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

Justin Trudeau

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: