Google doodle : கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி, கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி, கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
Advertisment
கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...
1919ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் ஆஜம்கார் பகுதியில் சயீத் அதர் ஹூசைன் ரிஜ்வியாக பிறந்தார். தனது 11ம் வயதிலேயே, மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை மையமாக கொண்டு கவிதை எழுதினார். 1943ம் ஆண்டில், பல்வேறு எழுத்தாளர்களின் துணைகொண்டு சமூக கருத்துக்கள் கொண்ட பாடல்களின் தொகுப்பை வெளியிட்டார்.
ஆகிர் இ ஷாப், சர்மயா, அவாரா சஜ்தே, கைபியாத், நய் குலிஸ்தான் உள்ளிட்டவைகள் இவரின் சிறந்த படைப்புகள் ஆகும். இவர் உருது மொழியில் எழுதிய மேரி ஆவாஜ் சுனோ, உள்ளிட்ட பாடல்கள், மக்களின் மனதில் இன்றளவும் பசுமை மரத்தாணிகளாக பதிந்துள்ளன. ஹீர் ரஞ்ஜ்கா, அவுரத், மகான் டேரா, சான்ப், பாகுருபினி உள்ளிட்ட இவரின் படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
பாலிவுட் சினிமாவில் பங்கு : ஆஸ்மி, திரைத்துறையில், ஷாகிர் லுதியான்வி, ஜன் நிசார் அக்தர், மஜ்ரு சுல்தான்புரி உள்ளிட்டோருடன் இணைந்து வெளியிட்ட பாடல்களுக்கு இன்றுவரை நிகர் இல்லை எனலாம். கரம் ஹாவா, மந்தன், காகாஜ் கே புல் உள்ளிட்டவைகள் இவரின் திறமைக்கு சான்றாக அமைந்தவை.
இவரின் சுயசரிதை, Aaj Ke Prashid Shayar: Kaifi Azmi. என்ற பெயரில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆஸ்மி, 3 பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ விருது, சாகித்ய அகாடமி விருது உள்ளிட்டவைகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
2002ம் ஆண்டு மே மாதம், கைய்பி ஆஜ்மி மரணமடைந்தார். அவரது நினைவை போற்றும் வகையில் இந்திய அரசு, ஆஜம்கார் முதல் டில்லி வரையிலான ரயிலுக்கு கைபியாத் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டி கவுரவித்துள்ளது. பெண்கள் சமஉரிமைக்காகவும், கைய்பியின் பங்கு அளப்பரியது.
பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மியின் தந்தை கைய்பி ஆஸ்மி என்பது குறிப்பிடத்தக்கது.