Advertisment

அண்ணாமலைக்கு ஆதரவாக டான்ஸ் மாஸ்டர் கலா பிரசாரம்: நடு ரோட்டில் குத்து டான்ஸ் - வீடியோ

கோவையில் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை ஆதரித்து சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டர் செம டான்ஸ் ஆடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Kala master dance

பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டர் செம டான்ஸ் ஆடி பிரசாரம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவையில் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை ஆதரித்து சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டர் செம டான்ஸ் ஆடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

அண்ணாமலை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து, பா.ஜ.க தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.

இந்நிலையில் இன்று கோவை வடவள்ளி அதனை சுற்றியுள்ள பகுதியில் பிரசாரத்தில், பிரபல சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டர்  பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நடனமாடி பொதுமக்களை உற்சாகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கலா மாஸ்டரின் டான்ஸால் உற்சாகம் அடைந்த பா.ஜ.க வினர் நடனம் ஆடினார்.

சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டரை, மானாட மயிலாட, போன்ற டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்த்த பொதுமக்கள் அவர் நேரில் வந்து நடனம் ஆடியதைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.

இன்னும் பிரச்சாரத்திற்கு பத்து நாட்கள் இருக்கின்ற நிலையில் இன்று பிரசாரத்தில் கலா மாஸ்டர் கோவையில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து டான்ஸ் ஆடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment