New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/27/SmdNuzxcsR0Z3LVWRjd6.jpg)
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான யானை, கல்யாணி. 33 வயது. இந்த யானையை கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இருப்பினும், யானையின் உடல்நலம் குறித்து, வனத்துறையினர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்வது வழக்கம்.
கோவை மாவட்ட வளர்ப்பு யானை நலக்குழு, பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கல்யாணி யானையின் உடல் நலத்தை நேற்று ஆய்வு செய்தது. கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடந்த இந்த ஆய்வில், பேரூர் அரசு கால்நடை மருத்துவர், பேரூர் கோவில் செயல் அலுவலர் மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் (WWF) பிரதிநிதி பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆய்வின்போது கோடை காலத்தில் யானையின் உடல்நலத்தை பராமரிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆய்வில், கல்யாணி யானை, 4.5 டன் எடையுள்ளது. நல்ல உடல் நலத்துடன் உள்ளது தெரியவந்தது.
குறிப்பாக யானைக்கு ஒரு நாளைக்கு 4 முறை குளிப்பாட்டவும், அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களை உணவாக வழங்கவும் கோவில் செயல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், யானையின் உடல்நலத்தைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் வன அலுவலர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வு, யானையின் உடல்நலத்தை உறுதி செய்வதற்கும், கோடை காலத்தில் யானை பாதுகாப்பாக இருப்பதற்கும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, இதற்கு முன் யானையின் உடல்நல ஆய்வு 25.11.2024 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.