Advertisment

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்து; புகைப்படங்கள்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்து; புகைப்படங்கள்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Advertisment

publive-image

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

publive-image

150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது.

publive-image

publive-image இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்ற தனியார் இடம்

கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் உதவி இயக்குனர் சந்திரன், படப்பிடிப்பு தளத்தில் உணவு அளித்து வந்த மது, சந்திரன் ஆகிய மூன்று பேர் பலியானார்கள். 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.

publive-image இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, உணவு வழங்கிய ஊழியர் மது

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து தொடர்பாக கிரேன் ஆப்பரேட்டர், ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

publive-image

படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி செய்வதாக கூறினார்.

publive-image

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கமல்ஹாசன், தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Kamal Haasan Lyca Productions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment