கமல் கட்சி ஆரம்பித்தது நமக்குதாங்க சீரியஸ்: ஆனால் நெட்டிசன்களுக்கு எப்பவும் காமெடிதான்!

மதுரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் நேற்று (புதன்கிழமை) கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை துவக்கினார்.

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று (புதன்கிழமை) கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை துவக்கினார். அக்கட்சியின் கொடியையும் நற்பணி இயக்கத்தினர் ஏராளமானோர் முன்னிலையில் கமல்ஹாசன் ஏற்றினார். அக்கொடியில், சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஆறு கைகள் இணைந்தபடியும், நடுவில் நட்சத்திரம் ஒன்றும் இருந்தது.

ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தன் அரசியல் பயணத்தை துவங்கினார் கமல்ஹாசன். ஆங்காங்கே சில இடங்களில் மக்களை சந்தித்து பேசிய கமல், அப்துல்கலாமின் பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால், காரிலிருந்தபடியே மாணவர்களுக்கு கையசைத்தார்.

மாலையில் மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண் கல்லூரி அருகேயுள்ள மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தன்னுடைய கட்சி பெயரை அறிவித்து கொடி ஏற்றினார். கட்சி துவங்கியபின்னர் அங்கிருந்த பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.

கமல்ஹாசனின் புதிய கட்சியில் நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் வையாபுரி, ஆர்.கே.சுரேஷ், பரணி, நாசரின் மனைவி கமீலா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா உள்ளிட்டோர் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டனர்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கமல் கட்சி துவங்கியுள்ளார். இதனை, அனைத்து ஊடகங்களும், மக்களும் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கையில், வழக்கம்போல் நெட்டிசன்கள் கமல்ஹாசனையும், கட்சியையும் கேலி செய்து மீம்ஸ், வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டனர். அவற்றில் சிலவற்றை காண்போம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close