Advertisment

மகாராஷ்டிரா முதல்வர் யார்? வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமலின் தீர்க்க தரிசன பதில்... வீடியோ வைரல்

மாகாராஷ்டிரா அரசியல் சூழல் பற்றி விமர்சிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் 1980-களில் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் வீடியோ கிளிப் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற வசனம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மகாராஷ்டிரா அரசியல் சூழ்நிலைக்குப் பொருந்துவதால் கமல் ரசிகர்களும் நெட்டிசன்களும் அதை பரப்பி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Haasan movie Varumaiyin niram sivappu, Kamal Haasan Varumaiyin niram sivappu video viral, வறுமையின் நிறம் சிவப்பு வீடியோ வைரல், கமல்ஹாசன் வறுமையின் நிறம் சிவப்பு, மகாராஷ்டிரா முதல்வர் யார்? kamal haasan predicted Maharashtra political situation, varumaiyin niram sivappu movie video viral, Who is Maharashtra chief minister?

Kamal Haasan movie Varumaiyin niram sivappu, Kamal Haasan Varumaiyin niram sivappu video viral, வறுமையின் நிறம் சிவப்பு வீடியோ வைரல், கமல்ஹாசன் வறுமையின் நிறம் சிவப்பு, மகாராஷ்டிரா முதல்வர் யார்? kamal haasan predicted Maharashtra political situation, varumaiyin niram sivappu movie video viral, Who is Maharashtra chief minister?

மாகாராஷ்டிரா அரசியல் சூழல் பற்றி விமர்சிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் 1980-களில் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் வசனம் வீடியோ கிளிப் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற வசனம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மகாராஷ்டிரா அரசியல் சூழ்நிலைக்குப் பொருந்துவதால் கமல் ரசிகர்களும் நெட்டிசன்களும் அதை பரப்பி வருகின்றனர்.

Advertisment

மகாராஷ்டிரா தேர்தலுக்குப் பிறகு, அரசு அமைப்பதில் பாஜக - சிவசேனா இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வதில் முரண்பாடு ஏற்பட்டது. யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனால், சிவசேனா என்.சி.பி, காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

இதனிடையே, சனிக்கிழமை அதிகாலையில், சிறப்பு விதியை பயன்படுத்தி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கிவிட்டு என்.சி.பி.யின் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் பதவியேற்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா-என்.சி.பி.-காங்கிரஸ் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்பை நடத்தியது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்காமல் தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவை முதல்வராக ஏற்க தீர்மாணித்தது.மகாராஷ்டிரா அரசியலில் இந்த திடீர் திருப்பங்கள் எல்லாமே மூன்று நாட்களில் நடந்தது.

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் அரசியல் கட்சிகளின் இந்த நடவடிக்கையை விமர்சிக்கும் விதமாக, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடித்து 1980-களில் வெளியான ‘வறுமையின் நிறம் சிவப்பு’ திரைப்படம். இந்தப் படத்தில் மகாராஷ்டிரா அரசியல் சூழ்நிலை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்க தரிசனம் போல கூறியிருக்கிறார் என்று கமல் ரசிகர்களும் நெட்டிசன்களும் அந்தப் படத்தின் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்ததால் வைரல் ஆனது.

கமல்ஹாசன் நடிப்பில் 1980-களில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமல்ஹாசன் வேலையில்லா பட்டதாரியாக நடித்திருப்பார். அவர் ஒரு வேலைக்கு நேர்காணலுக்கு செல்கிறார். நேர்காணலில் அவரிடம் மகாராஷ்டிராவின் முதல்வர் யார் என்று நேர்காணல் செய்பவர்கள் கேள்வி கேட்கின்றனர். அதற்கு, கமல்ஹாசன் இன்றைய முதல்வரா? அல்லது நேற்றைய முதல்வரா? அல்லது அதற்கு முன்தின நாள் முதல்வரா? யார் பெயரை சொல்ல வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு நாளும் முதல்வர் பதவி வகிப்பவர் மாறிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.

கமல்ஹாசன் பேசிய இந்த வசனம் இன்றைய மகாராஷ்டிரா சூழ்நிலைக்கு பொருந்துவதால் இந்த வீடியோ டுவிட்டரில் வரைல் ஆகி உள்ளது.

Kamal Haasan Maharashtra Mnm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment