Kamala Harris calls teen artist to thank him for creating her portrait : 14 வயதான டைலர் கார்டன் என்ற சிறுவன், அமெரிக்காவின் துணை ஜனாதிபாதி கமலா ஹாரீஸின் உருவத்தை அச்சு அசலாக வரைந்துள்ளார். அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “என்னுடைய பெயர் டைலர் கார்டன், 14 வயதாகிறது. நான் பே ஏரியாவில் வசித்து வருகின்றேன். நான் உங்களின் இந்த புகைப்படத்தை வரைந்துள்ளேன். உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கின்றேன்” என்று கூறிய கார்டன், இந்த ட்வீட் கமலாவின் பார்வைக்கு செல்லும் வரை ரீட்வீட் செய்யுங்கள் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
23ம் தேதி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார் கார்டன் . 26ம் தேதி மீண்டும் ஒரு ட்வீட்டில் அவர் என்னிடம் பேசினார். கமலா ஹாரீஸ் என்னிடம் பேசினார் என்று எழுதியிருந்தார். பின்பு சிறிது நேரம் கழித்து கமலா ஹாரீஸிடம் பேசிய காட்சிகளை அவர் பதிவிட அந்த வீடியோவும் வைரலானது.
கமலா ஹாரீஸ் கார்டனிடம் அவரது திறமைகள் குறைத்து வெகுவாக பாராட்டினார். மேலும் வாய்ப்புகள் இருந்தால் நிச்சயம் ஒரு நாள் சந்திப்போம் என்றும் கூறிய அவர் தேங்க்ஸ்கிவ்விங் நாளன்று டைலரின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோவை பார்க்கும் போதே கார்டனின் மகிழ்ச்சி தெரிகிறது. அத்தனை சந்தோசம் அவருடைய முகத்தில்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil