அமெரிக்க தேர்தலில் அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் இந்தியாவில் பிரபலமாகி வருகிறார். அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க கருப்பின பெண், முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் கமலா ஹாரிஸ். இவர் 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஜோ பைடனுடன் இணைந்து பல மாதங்கலாக கடுமையாக உழைத்து வருகிறார்.
கமலா ஹாரிஸ் நேற்று இரவு டெலாவரில் தனது வெற்றி உரையை நிகழ்த்தினார். அடுத்த ஆண்டு ஜனவரியில் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், கமலா ஹாரிஸின் சகோதரி மீனா ஹாரிஸ், பகிர்ந்துள்ள கமலாஹாரிஸுடன் ஒரு சிறுமி இருக்கிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
This conversation went on for like an hour
A post shared by Meena Harris (@meena) on
அது கமலா ஹாரிஸின் சகோதரியின் மகளாக இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. கமலா ஹாரிஸும் சிறுமியும் கருப்பு மாஸ்க் அணிந்து காணப்படுகிறார்கள். தனது பெரியம்மாவின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுமி நீங்கள் அதிபராக வேண்டும் என்று விரும்புவதாக கூறுகிறாள். கமலா அதற்கு தலையசைத்து பதிலளிக்கிறார்: “நீ அதிபராக இருக்க வேண்டும். ஆனால், இப்போது அல்ல. அதற்கு உனக்கு 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.” அதற்கு சிறுமி, “ஆமாம், ஆனால், நான் ஒரு விண்வெளி வீராங்கனை தலைவியாக இருப்பேன்” என்று பதிலளிக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில், மீனா ஹாரிஸ் “இந்த உரையாடல் ஒரு மணி நேரம் நடந்தது” என்று தலைப்பிட்டு கூறியுள்ளார்.
கமலா ஹாரிஸும் சிறுமியும் உரையாடும் உற்சாகமளிக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பலராலும் பாரட்டப்பட்டு வருகிறது. பெண்களின் உரிமைகள் மற்றும் சுயசார்புடன் இருப்பது பற்றி அதிகம் குரல் கொடுத்த ஹாரிஸ், குறிப்பாக வண்ணமயமான பெண்கள் - ஒருவராக இருப்பது - அவரது ஊக்க அணுகுமுறைக்காக பாராட்டப்பட்டது. ஒரு நாள், நாட்டின் முக்கியத்துவத்திற்கு தலைமை தாங்க முடியும் என்று சிறுவர்களிடம் கூறியது நாட்டின் முக்கிய விவகாரங்களாக உள்ளன.
இந்த வீடியோ பகிரப்பட்டு பரவியது, பலர் வீடியோ குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்:
“You could be president.” pic.twitter.com/akB2Zia2W7
— Meena Harris (@meenaharris) November 5, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.