உலக அரசியலில் உச்சரித்த 'சித்தி' - கமலா ஹாரிஸ் பேச்சு வைரல்

ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் ' சித்தி ' என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தினார்

ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் ' சித்தி ' என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தினார்

author-image
WebDesk
New Update
Kamala Harris

Kamala Harris

நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்  போட்டியிடுவார்கள் என்று அமெரிக்கா ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற, தேசிய மாநாட்டில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்க பெண் ஒருவரை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்திருப்பது  அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தேசிய மாநாட்டில் பேசிய கமலா ஹாரிஸ் இது தமக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என்று கூறினார். அமெரிக்க காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளேயிட், பெர்னினா டெய்லர் ஆகியோரது பெயர்களை சுட்டிக்காட்டிய கமலா, அமெரிக்காவில் அனைவருக்கும் சமநீதியும், சம வாய்ப்பும் கிடைக்க தாம் பாடுபடப் போவதாக தெரிவித்தார்

தனது தாய் ஷியாமலா குறித்து பேசிய அவர் , " பெருமைகொள்ளும் கறுப்பின பெண்ணாய் என்னை உருவாக்கினார். இந்திய பாரம்பரியத்தை அறிந்து, பெருமை கொள்ளும் விதமாய் என்னை வளர்த்தார். குடும்பத்தின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுத்தார்”என்று கூறினார்.

Advertisment
Advertisements

குடும்ப உறுப்பினர்கள் குறித்து பேசுகையில்,  மாமாக்கள் ( uncles) அத்தைகள் (aunts), சித்திகள் (chithis) எனது குடும்பங்களாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ் தனது உரையில் சித்தி என்ற வார்த்தையை பயன்படுத்தியது,      இந்திய-அமெரிக்க மற்றும் தமிழ் சமூகத்தினரிடையே  பெரும் வியப்பை  ஏற்படுத்தியது.

அமெரிக்கர்களுக்கு சித்தி என்ற வார்த்தை பழக்கமில்லாதால், அனைவரும் இந்த வார்த்தைக்கான அர்த்தங்களை தேட தொடங்கிவிட்டனர். சித்தி என்ற வார்த்தை தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர்கள். ஸ்டெனோகிராஃபர் ஆக வாழ்க்கையை தொடங்கிய கோபாலன், ஆங்கிலேய அரசில் சிவில் சர்வீஸ் பணியில் பணியாற்றியவர். 1930-ம் ஆண்டு ஜாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக இந்திய அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

Usa Kamala Harris

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: