செப்டம்பர் 8-ம் தேதி தேசிய தாத்தா பாட்டி தினத்தில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது தாத்தா பாட்டிக்கு ஒரு பதிவை சமர்ப்பணம் செய்துள்ளார். கமலா ஹாரிஸ் தனது குழந்தை பருவ பயணங்களை நினைவு கூர்ந்தார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹாரிஸ், தனது தாத்தா பி.வி.கோபாலன் மற்றும் பாட்டி ராஜம் கோபாலன் ஆகியோருடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் பதிவில், தான் இந்தியாவில் இருந்த காலத்தில் தனது தாத்தாவுடன் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டதை நினைவு கூர்ந்தார். “இந்தியாவில் உள்ள என் தாத்தா மற்றுஒம் பாட்டியைப் பார்க்க ஒரு சிறு பெண்ணாக இருந்தபோது, என் தாத்தா என்னை தனது காலை நடைப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு சமத்துவத்திற்காகப் போராடுவது மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிப்பார். அவர் இந்தியாவின் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். என் பாட்டி இந்தியா முழுவதும் பயணம் செய்தார் - கையில் ஒலிப்பெருக்கியுடன் - பிறப்பு கட்டுப்பாட்டை அணுகுவது பற்றி பெண்களுடன் பேச பயணம் செய்தார்” என்று அவர் எழுதினார்.
மேலும், “பொது சேவைக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான போராட்டங்கள் இன்று என்னுள் இருகின்றன. அடுத்த தலைமுறையை வடிவமைக்கவும் ஊக்குவிக்கவும் உதவும் அனைத்து தாத்தா பாட்டிகளுக்கும் தேசிய தாத்தா பாட்டி தின வாழ்த்துக்கள்” என்று கமலா ஹாரிஸ் கூறினார்.
கமலா ஹாரிஸின் எக்ஸ் பதிவை இங்கே பாருங்கள்:
As a young girl visiting my grandparents in India, my grandfather took me on his morning walks, where he would discuss the importance of fighting for equality and fighting corruption. He was a retired civil servant who had been part of the movement to win India’s independence.… pic.twitter.com/vOpgtsomQN
— Kamala Harris (@KamalaHarris) September 8, 2024
எக்ஸ் பயனர்கள் பலர், கமலா ஹாரிஸின் இந்திய வேர்களைப் பாராட்டியதால், இந்த பதிவு 2 மில்லியன் பார்வைகளைக் குவித்தது. ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “உங்கள் தாத்தா பாட்டிகளின் மரபு இந்தியாவில் எங்களுடன் ஆழமாக எதிரொலிக்கிறது - சமத்துவம் மற்றும் நீதிக்கான அவர்களின் போராட்டம் நமது தேசத்தின் உணர்வை பிரதிபலிக்கிறது.” என்று தெரிவித்துளார். மற்றொரு பயனர் எழுதினார், “தாத்தா பாட்டிகளின் ஞானத்திற்கும் வலிமைக்கும் என்ன ஒரு அழகான அஞ்சலி. அவர்களின் பாரம்பரியம் உங்கள் மூலம் வாழ்கிறது, அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை ஊக்குவிக்கிறது.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். சமீபத்தில், ஒரு இந்திய - அமெரிக்க தொழிலதிபரும் ஹாரிஸின் ஜனநாயகக் கட்சிக்கான நிதி திரட்டியவருமான அஜய் ஜெயின் புரோட்டியா நச்சோ நாச்சோ என்ற இந்தி இசை வீடியோவை வெளியிட்டார். மேலும், தெற்காசிய மக்கள் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.