Advertisment

வைரல் வீடியோ: பொது இடத்தில் நெருங்கிவந்த ரசிகரை கோபமாக தள்ளிவிட்ட கமல்

நடிகர் கமல்ஹாசன் பொது இடத்தில் தன்னை நெருங்கிவந்த ரசிகர் ஒருவரை தள்ளுவிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வைரல் வீடியோ: பொது இடத்தில் நெருங்கிவந்த ரசிகரை கோபமாக தள்ளிவிட்ட கமல்

நடிகர் கமல்ஹாசன் பொது இடத்தில் தன்னை நெருங்கிவந்த ரசிகர் ஒருவரை தள்ளுவிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

எந்த இடத்தில் எப்போது நடைபெற்ற சம்பவம் என்பது உறுதியாக கண்டறிய முடியவில்லை. ஆனால், இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், கமல்ஹாசன் வணிக வளாகம் போன்று தோன்றும் இடம் ஒன்றில், படிக்கட்டில் இறங்கி வருகிறார். அப்போது, அங்கு திரண்டிருந்த அவருடைய ரசிகர்களை காவலர்கள் இருவர் கட்டுபப்டுத்த முடியாமல் உள்ளனர். கமல்ஹாசனுடன் நடிகர் ரமேஷ் அரவிந்தும் இருக்கிறார். அவரும் ரசிகர்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.

அப்போது, ரசிகர் ஒருவர் கமல்ஹாசனை நெருங்கி வருகிறார். அப்போது, கமல்ஹாசன் அவருடைய கன்னத்தை பிடித்து தள்ளுகிறார். இந்த வீடியோ அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment