New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/2021-02-23T010516Z_576048578_RC21YL92GH8X_RTRMADP_2_PAKISTAN-POLICE-ROLLERBLADING.jpg)
கராச்சி காவல்துறையினரின் செயல்பாடு குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
Karachi police put on their rollerblades to curb street crime : பாகிஸ்தான் கராச்சியில் உள்ள காவல்துறையினர் தெருக்களில் நடைபெறும் திருட்டு, பெண்களை கேலி செய்தல் போன்ற குற்றங்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. 20 நபர்கள் கொண்ட அந்த சிறப்பு குழுவில் 10 ஆண் காவலர்களும் 10 பெண் காவலர்களும் இணைந்துள்ளனர். 20 மில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் இந்த நகரில் இந்த சிறப்பு குழு என்ன செய்கிறது என்று பாருங்கள்!
தெருப்பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்க இந்த 20 பேரைக் கொண்ட சிறப்பு காவல்ப்படை ”ஸ்கேட்டிங்” வீல்களை பயன்படுத்துகின்றனர். ஹாலிவுட் படத்தை பார்ப்பது போன்று இது இருந்தாலும் இது குற்றங்களை குறைக்கும் என்று நம்புகின்றனர்.
WATCH: Police in Karachi, Pakistan are training an armed rollerblading unit to better prevent theft and harassment on its streets. pic.twitter.com/IX5CrM6tep
— CBS News (@CBSNews) February 23, 2021
இவர்கள் பயிற்சி பெறும் காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கராச்சியின் பல்வேறு சாலைகள் மிகவும் மோசமானதவும் சமமற்றதாகவும் இருக்கிறது. இல்லையென்றால் இந்த நடைமுறையை நாங்கள் கராச்சியின் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தி குற்ற செயல்களை தடுக்க முயன்றிருப்போம் என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி. பாகிஸ்தான் காவல்துறையின் இந்த செயல்பாட்டினை பலரும் பாராட்டி கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். கராச்சி காவல்துறையினரின் செயல்பாடு குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.