New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-81.jpg)
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீநிவாஸ் குப்தா தனது புது வீட்டு கிரகப்பிரவேச விழாவை உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் .சில,ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பறிக்கொடுத்த தனது மனைவியை, சிலிகான் சிலையாக வடிவமைத்து, உலகத்துக்கு அறிமுப்படுத்தினர்.
விழாவில், பங்கேற்ற விருந்தினர்கள் பலரும் சிலையைக் கண்டு ஆச்சர்யமடைந்தனர்.
ஸ்ரீநிவாஸ் குப்தாவின் மனைவி கே.வி.என்.மாதவி. குடும்பத்துடன் திருப்பதி சென்றபோது நடந்த சாலை விபத்தில் மாதவி உயிரிழந்தாக கூறப்படுகிறது. அனுஷா, சிந்துஷா என இவர்களுக்கு இறந்து குழந்தைகளை உள்ளனர்.
The gorgeous lady you see in a Pink saree in the photos below is not real, it’s a wax statue. Businessman Srinivas Gupta, from #Karnataka, got a statue done of his wife- who died in an accident, a year ago. Family wanted her to be a part of their house-warming ceremony. ???? pic.twitter.com/axQZjO3w2R
— Rishika Sadam (@RishikaSadam) August 10, 2020
மாதவி இல்லாத கிரகப்பிரவேச விழாவை நினைத்து பார்க்க முடியாத அந்த குடும்பம், பெங்களூருவில் உள்ள ஒரு பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையை அணுகி மாதவி போன்றே தத்ரூபமான சிலிகான் சிலையை ஏற்பாடு செய்தனர்.
மனைவியின் நினைப்போடு புதுமனை புகுவிழாவை விழாவை கொண்டாடும் போட்டோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.