ஆத்தாடி! இது நாகினி ஆட்டத்தை விட படு பயங்கரமா இருக்கு.. ஓட்டுக்காக இப்படியா?

10 நிமிடம் தொடர்ந்து ஒரே ஸ்டெப்பை மாறி மாறி ஆடினார்.

minister snake dance video : தேர்தல் வந்துட்டா அரசியல் தலைவர்களை கையில் பிடிக்க முடியாது. இந்த கேப்ஷனில் தினமும் ஓராயிரம் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மக்களிடம் ஓட்டு கேட்க செல்லும் அரசியல் தலைவர்கள் நூதனமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுப்படுவது அரசியலில் உள்ள வழக்கம் தான்.

அதற்காக அவர்கள் செய்யும் சில செயல்கள் ஓவர் ஃப்ராம்மென்ஸ் ஆகி ஒரே நாளில் இணையத்தில் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் கர்நாடக அமைச்சர் ஒருவர் ஓட்டு கேட்க சென்ற இடத்தில் நாகினி டான்ஸ் ஆடிய சம்பவம் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

கர்நாடகாவின் வீட்டு வாரிய அமைச்சராக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.டி.பி. பிரசாத் நாகராஜு கோஷ்கோடே என்ற பகுதியில் தொண்டர்கர்ள் உடன் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது இந்தி படமான நாகின் என்ற படத்தில் இடம்பெறும் பிரபல பாடல் ஒன்று இசைக்கப்பட்டது. உடனே உற்சாகத்தில் பொங்கிய அமைச்சர் கையை மேலே தூக்கி பாம்பு டான்ஸ் ஆட தொடங்கி விட்டார்.

அமைச்சர் ஆடுவதை பார்த்த கட்சி தொண்டர்கள் கூடவே அவருடன் சேர்ந்து சேம் ஸ்டெப்பை போட ஆரம்பித்தனர். சுமார் 10 நிமிடம் தொடர்ந்து ஒரே ஸ்டெப்பை மாறி மாறி அனைவரும் ஆடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அதுமட்டுமில்லை இந்த பாம்பு டான்ஸ் மூலம் ஃபேமஸ் ஆன பிரசாத் நாகராஜு நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏ என்ற பெருமையையும் உடையவர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களின் மைண்ட் வாய்ஸ் இதுதான் “ஓட்டு வாங்க இவங்க பண்ற அக்கப்போருக்கு அளவே இல்லையா?”

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close