ஒட்டு மொத்த மக்களின் பாராட்டுக்களை பெற்ற தல ரசிகர்கள்.. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?

அஜித்தின் பெயரை சொல்லி எதாவது நல்ல விஷயங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர்களில் மிக பிரபலமானவரான அஜீத் தனக்கு என ரசிகர்மன்றங்களை விரும்பாதவர். எளிமையை கடைபிடிப்பவர். அதே சமயம் பிறருக்கு உதவுவது போன்ற நல்ல விஷ்யங்களை தன் ரசிகர்கள் செய்யும் போது அதனை ஊக்கப்படுத்துபவர் தல அஜீத்.

தமிழ்நாட்டில் மட்டும் இவருக்கு ரசிகர்கள் இல்லை, கர்நாடாகா மாநிலத்திலும் சரிக்கு சமமாக தல அஜித்திற்கு ரசிகர்கள் உண்டு. தல அஜித், தன்னுடைய ரசிகர்கள் தனக்காக எதையும் செய்து, அவர்களின் நேரத்தை, பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று நினைப்பவர். அதற்காகவே ரசிகர் மன்றத்தை கூட கலைத்தவர். அப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அஜித்தின் ரசிகர்கள், அஜித்தின் பெயரை சொல்லி எதாவது நல்ல விஷயங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் அஜீத்தின் பெயரால் பல நற்காரியங்களை செய்துவருகின்றனர் அவரின் ரசிகர்கள். அஜீத்திற்கு கர்நாடகாவிலும் அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கின்றனர். கர்நாடகாவில் கோலார் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் அஜீத்தின் பெயரில் நற்செயல் ஒன்றை செய்திருக்கின்றனர். பிரசவத்துக்கு இலவசம் என்று ஆட்டோக்களில் எழுதி இருப்பதை போல, இவர்கள் கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவச வாகன சேவையை துவங்கி இருக்கின்றனர்.

கர்நாடக அஜீத் ரசிகர்கள் செய்திருக்கும் இந்த நற்செயலை தமிழக அஜீத் ரசிகர்கள் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு, மனமாற பாராட்டி இருக்கின்றனர். ” கர்ப்பிணி பெண்களுக்கு இலவச வாகன சேவை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்ட தல ரசிகர்களால் தொடங்கப்பட்டது…அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்” என அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close