கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று (15. 5. 18) வெளியாகின. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போதே எண்ணிக்கையில் முதலில் இருந்த காங்கிரஸ், மெல்ல மெல்ல சரிந்தது. அதன் பின்பு, பிஜேபி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்க தொடங்கியது.
இறுதியில், 104 இடங்களில் பிஜேபியினர் தங்களின் வெற்றியை பதிவு செய்தனர். அதன் பின்பு, நாடு முழுவதும் பிஜேபியினர் வெற்றி கொண்டாட்டத்தில் குதித்தனர். இனிப்புக்கள் வழங்குவது, பட்டாசுக்கள் வெடிப்பது என நாடு முழுவதும் ஒரே உற்சாக கரகோஷங்கள் எழுப்பட்டன.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஹெச் ராஜா, ஆகியோர் கர்நாடக தேர்தலில் பிஜேபியின் வெற்றி குறித்து ஊடகங்களில் பல கருத்துக்களை பதிவு செய்ய தொடங்கினர். பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா தென்னிந்தியாவில் காலூன்ற கர்நாடக தேர்தலே நுழைவு வாயில் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
அப்போது நிலைமை தலைமை கீழ் ஆனது. 78 இடங்களை பெற்ற காங்கிரஸ் , 37 இடங்களை பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி இவர்கள் இருவரும் கூட்டணி வைத்தால் பிஜேபியால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த தகவல் வெளியான உடனே, மீன்ஸ் கிரியேட்டர்கள் அதை கொண்டாட ஆரம்பித்தனர். வெற்றியை கொண்டாடிய பிஜேபியினரை வச்சி செய்த வீடியோக்கள், மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு....
https://www.facebook.com/srinivas.crazeincraig/posts/2158326017529106
https://www.facebook.com/princejoshuapj/videos/978952472262486/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.