New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/01/2-Copy-2-5.jpg)
kasthuri twitter actress kasthuri kuthu vilakku
குத்து விளக்கு சாங், மாஸ்டர் சாங் என கஸ்தூரியின் கலக்கல் நடனம் பார்ப்பவர்களையும் ரசிக்க வைத்துள்ளது
kasthuri twitter actress kasthuri kuthu vilakku
kasthuri twitter actress kasthuri kuthu vilakku: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி திடீரென கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ இணையத்தில் செம்ம வைரல்.
குமரி மாவட்டம் பொட்டல் குளத்தில் உள்ள அஞ்சுகிராமம் அருகில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடந்தது. சமத்துவ பொங்கல் விழாவான இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி கல்லூரி மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர், அங்கிருந்த மாணவிகளுடன் உற்சாகமாக நடனம் ஆடி அசத்தினார். குத்து விளக்கு சாங், மாஸ்டர் சாங் என கஸ்தூரியின் கலக்கல் நடனம் பார்ப்பவர்களையும் ரசிக்க வைத்துள்ளது. நடிகை கஸ்தூரியின் இந்த குத்தாட்டம் விழா மேடையில் அமர்ந்து இருந்தவர்களையும் நிகழ்ச்சியை காண வந்தவர்களையும் மகிழவைத்துவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.