ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் கடந்த சில தினங்களாக கேரளாவில் இருந்து வந்த சுள்ளி கொம்பன் (எ) கட்டக் கொம்பன் சேத்துமடை,காண்டூர் கனால், ஆழியாறு, நவமலை பகுதிகளில் நடமாடி வருகிறது,வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.
தற்பொழுது கவி அருவி வரட்சியின் காரணமாக மூடப்பட்டுள்ளது. வனத்தை விட்டு வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை வால்பாறை சாலையில் நடந்து வந்த வீடியோ சுற்றுலா பயணி எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டக்கொம்பன் விவசாயத் தோட்டத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"