நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் வெளிவர இருக்கும் தனது படத்தின் ஒரு பாடலுக்கு லுங்கி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிமுருகன், சண்டக்கோழி 2, பைரவா, மகாநடி, அண்ணாத்த, சர்க்கார் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மகாநடி திரைப்படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் சிறப்பாக நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் மாமன்னன் என்ற படத்திலும், தெலுங்கில் தசரா, போலோ சங்கர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் கீர்த்தி சுரேஷ் விரைவில் லுங்கி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் தனது வரவிருக்கும் படமான தசராவிலிருந்து தூம் தாம் தோஸ்தான் என்ற முதல் சிங்கிள் பாடலைப் பற்றிய வேடிக்கையான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பாடல் ஒரு மாஸ் என்டர்டெய்னராக உள்ளது, இது உங்களை நடனமாட வைக்கும். அந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் கருப்பு டேங்க் டாப், சட்டை மற்றும் லுங்கி அணிந்து, ஒரு உண்மையான தெரு நடனக் கலைஞரைப் போல தூம் தாம் தோஸ்தான் பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார்.
அவருடன் அவரது தோழி அக்ஷிதா சுப்பிரமணியனும் டான்ஸ் ஆடியுள்ளார். வீடியோவைப் பகிர்ந்து, “அது எனது தோஸ்த் அக்ஷிதா சுப்ரமணியனுடன் எனது தூம் தாம்! உங்கள் தூம் தாம் எங்கே?” என பதிவிட்டு “தூம் தாம் தோஸ்தான்” மற்றும் “தசரா” என்ற ஹேஷ்டேக்குகளையும் கீர்த்தி சுரேஷ் சேர்த்துள்ளார்.
தூம் தாம் தோஸ்தான் இந்த மாதம் தசரா அன்று வெளியானது. தசரா படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது.
மற்றொரு காரணத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு தசரா சிறப்பாக இருந்தது. அவர் வீட்டிற்கு ஒரு BMW X7 SUV வந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் தனது புதிய காரை ஓட்டும் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “கொண்டாட்டம், பண்டிகை நாட்கள் மற்றும் சில சுவையான உணவுகள்! ஆயுத பூஜை, தசரா… நவராத்திரி 2022,” என்று கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil