New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/template-2020-08-19T155847.619.jpg)
Boy playing drums video : மலையாள திரையுலகில் பெரும்வெற்றி பெற்ற மணிச்சித்திரதாலு படத்தின் பாடலை, மார்பிளில் 2 குச்சிகளை வைத்து இசைத்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலானது
கேரளாவை சேர்ந்த சிறுவன் ஒருவன், மார்பிள் ஒன்றை இரண்டு குச்சிகளால் தட்டி இசை எழுப்பும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த மலையாள திரைநட்சத்திரங்கள், அந்த சிறுவனுக்கு நிஜ டிரம்செட்டையே பரிசாக வழங்கியுள்ளனர்.
He just has it in him! pic.twitter.com/4NEQRCrPAq
— Kaveri ???????? (@ikaveri) August 17, 2020
கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளியின் மகன் 6 வயதான அபிஷேக் கிச்சு.. மலையாள திரையுலகில் பெரும்வெற்றி பெற்ற மணிச்சித்திரதாலு படத்தின் பாடலை, மார்பிளில் 2 குச்சிகளை வைத்து இசைத்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை நடிகர்கள் ஜெயராம் மற்றும் உன்னி முகுந்தன் பார்வைக்கும் சென்றது.
இயக்குனரும், தயாரிப்பாளருமான விஜேஷ் மணியை தொடர்பு கொண்ட ஜெயராம், அந்த சிறுவனுக்கு டிரம்ஸ் பரிசளிக்குமாறு
கேட்டுக்கொண்டதற்கிணங்க, மணி, அந்த சிறுவனுக்கு செண்டை மேளத்தை பரிசளித்தது மட்டுமல்லாது, அந்த சிறுவன் செண்டை மேளம் இசைக்கும் வீடியோவை, தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.
நடிகர் முகுந்தனின் சார்பில், டிரம் கிட், அவரது ரசிகர் மன்றத்தினரால் வழங்கப்பட்டது. அப்போது சிறுவன் உடன் வீடியோ காலில் பேசிய முகுந்தன், அந்த பாடலை இசைக்கும்படி கேட்டு மகிழ்ந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.