New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/08/kerala-forest-officer-roshini-2025-07-08-10-49-13.jpg)
சுமார் 16 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை, கேரள வனத்துறையில் பணியாற்றும் அதிகாரி ரோஷினி என்பவர் மீட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.
பாம்பை கண்டாலே அச்சம் கொள்ளும் எத்தனையோ பேருக்கு இடையே, கேரளாவில் ரோஷினி என்ற வனத்துறை அதிகாரி, ஏறத்தாழ 16 நீளம் கொண்ட ராஜநாகத்தை மீட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
கேரள வனத்துறையில் பணியாற்றும் ரோஷினி, இதுவரை 800-க்கும் மேற்பட்ட பாம்புகளை பாதுகாப்பாக மீட்டுள்ளார். எனினும், அவரது சமீபத்திய செயல் பெரும் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
மற்ற வகை பாம்புகளை விட ராஜநாகம் பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக காணப்படும். தகுந்த பயிற்சி இல்லாதவர்களால் இது போன்ற ராஜநாகத்தை பத்திரமாக மீட்பது அவ்வளவு எளிதான செயல் கிடையாது.
அந்த வகையில், தனது அனுபவம் மூலமாக 16 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை, வனத்துறை அதிகாரி ரோஷினி மிக லாவகமாக மீட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இந்த மீட்பு நடவடிக்கையின் போது அவர் காட்டிய நிதானம் மற்றும் அசாத்தியமான துணிச்சல் பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
வனத்துறை அதிகாரி ரோஷினியின் இந்த தீரமிகு செயலுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
My salutations to the green queens & the bravery shown by them in wild🙏
— Susanta Nanda IFS (Retd) (@susantananda3) July 7, 2025
Beat FO G S Roshni, part of Rapid Response Team of Kerala FD rescuing a 16 feet king cobra.This was the 1st time she was tackling a king cobra though she is credited to have rescued more than 800 snakes… pic.twitter.com/E0a8JGqO4c
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.