பெங்களூருவில் ஒரு ஷாப்பிங் மால் முன்பு கேரள மாடலிங் பெண் பிரியங்கா ஷெனாய் மேனன் தமிழ் பாடலுக்கு ஆடிய டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவருடைய டான்ஸைப் பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் எனர்ஜி என்று அவரைப் பாராட்டி வருகின்றனர்.
சமூக ஊடகங்களின் காலத்தில் ஒவ்வொரு நாளும் பல கொண்டாட்டமான வீடியோக்கள் வைரலாகி பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த மாடலிங் பெண் பிரியங்கா ஷெனாய் மேனன், பெங்களூருவில் ஒரு ஷாப்பிங் மால் முன்பு, நீல நிற குர்தா அணிந்து, ‘யாத்தி யாத்தி’ என்ற தமிழ் பாடலுக்கு ஒரு மாஸான டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், பிரியங்கா ஆடும் டான்ஸைப் பார்ப்பவர்கள் ப்பா… என்னா டான்ஸ் வேற லெவல் எனர்ஜி என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
‘யாத்தி யாத்தி’ யாசின் நிசார், அனுராதா ஸ்ரீராம் மற்றும் அபிஷேக் சிஎஸ் ஆகியோர் பாடிய பிரபலமான தமிழ்ப் பாடல். இந்த பாடலுக்கு பிரியங்கா ஷெனாய் மேனனின் டான்ஸ் வீடியோவை இதுவரை 50,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 5,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அதைவிட, இந்த டான்ஸ் வீடியோவைப் பார்ப்பவர்களுக்கும் அவருடைய எனர்ஜியைக் கடத்தும் வண்ணம் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“