New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/26/ha9im1YSdyNNAwW3P6fK.jpg)
கடவுளின் சொந்த தேசத்திற்கு அழகு சேர்க்கும் கிரிக்கெட் கிரவுண்ட்: வைரலாகும் வீடியோ!
அமேசான் காட்டுக்குள் இருப்பதுபோன்றே மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கின்றனர். பார்த்தாவ் அவ்வளவு அழகாக இருக்கிறது. சரி… இந்த கிரிக்கெட் மைதானம் எங்கேதான் இருக்கிறது என்று பார்த்தால், கேரள மாநிலம் திருசூச்சூர் அருகேயுள்ள பாலப்பள்ளி என்ற இடத்தில்தான் உள்ளது.
கடவுளின் சொந்த தேசத்திற்கு அழகு சேர்க்கும் கிரிக்கெட் கிரவுண்ட்: வைரலாகும் வீடியோ!
அடர்ந்த வனப்பகுதியில் கேரள வைரல் கிரிக்கெட் மைதானம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பசுமையால் சூழப்பட்ட கிரிக்கெட் மைதானம் இணையத்தில் வைரலாக மாறியுள்ளது. அடர்ந்த காட்டின் நடுவே அழகான கிரிக்கெட் மைதானத்தை யார் கட்டியது? என்று தானே யோசிக்கிறீர்கள்! ட்ரோன் கேமரா காட்சிகளைப் பார்த்தால், இந்த பிட்ச் அமேசானின் மழைக்காடுகளுக்கு நடுவில் இருப்பதுபோல தோன்றும்.
சாலக்குடி வனச்சரகத்துக்குட்பட்ட ஹாரிசன் மலையாள தோட்டத்திற்குள் இந்த மைதானம் உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்தாலும், இங்கு சென்று யார் வேண்டுமானாலும் கிரிக்கெட் விளையாடலாம். இந்த மைதானத்தை நிர்வகித்து வரும் ஜலீல் என்பவர் கூறுகையில், இங்கு எந்த அணிகள் வேண்டுமானாலும் கிரிக்கெட் விளையாடலாம். நாங்களே கூட எதிரணியை தயார் செய்து தருவோம். பெரிய டோர்னாமென்ட் கூட நடத்தலாம். அடிக்கடி யானைகள் வரும். இதனால், காட்டுக்குள் தேவையில்லாமல் போகக் கூடாது. மற்றபடி, இங்கே வந்து விளையாட யாருக்கும் தடை இல்லை என்கிறார்.
சமீபத்தில், இந்த மைதானத்தின் ட்ரோன் வீடியோ இணையத்தில் வைரலாகிவிட்டன. இயற்கை அழகு மற்றும் உள்ளூர் விளையாட்டுகளின் தனித்துவமாக உள்ளது.
புல்தரை மைதானம் அடர்ந்த காடுகள் மற்றும் குறுகிய பாதைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இது ஒரு விளையாட்டு மைதானத்தை விட வெப்பமண்டல காடு போல உள்ளது. கேரளா அதன் இயற்கை அழகுக்காக "கடவுளின் சொந்த நாடு" என்றழைக்கப்படுகிறது. இந்த இயற்கை எழில்சூழ்ந்த கிரிக்கெட் மைதானம் அந்த அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இந்த வீடியோ ஏற்கனவே 51 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 5.5 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.